உள்ளூர் செய்திகள்

தடய மொழியியல் பயிலரங்கு

கோவை: பாரதியார் பல்கலை மொழியியல் துறை மற்றும் ரூசா 2.0 திட்டத்தின் நிதியுதவியுடன், 'தடய மொழியியல்: படைப்பாளி மற்றும் பேசுபவர் இனம் காணல்' என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நடந்தது. பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார்.கேரள மத்தியப பல்கலை மொழியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் ராமமூர்த்தி , குற்றவியல் புலனாய்வு, சட்ட நடைமுறைகள் மற்றும் இணையவழிக் குற்றங்களில் தடய மொழியியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.பயிற்சியில், எழுத்துப்பூர்வ சான்றுகளின் மூல படைப்பாளி இனம்காணல் , குரல் பதிவுகளைக் கொண்டு பேசுபவரை இனம்காணல் மற்றும் தடய மொழி பகுப்பாய்வு முறைகள் குறித்த கோட்பாட்டு மற்றும் செயல்முறைப் பயிற்சி வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்