அமெரிக்காவில் படிக்க வேண்டுமா?
இங்கு ஏராளமான படிப்புகள் இருப்பதால், ஒருவர் தனக்கு பொருத்தமான படிப்பை எளிதில் தேர்ந்தெடுக்க முடிகிறது. அமெரிக்காவில் வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து 8 வருடங்களாக இந்தியாவே முன்னிலையில் உள்ளது. சமீபத்திய பொருளாதார தேக்க நிலையால் இந்த எண்ணிக்கை குறைந்தாலும் முதலிடம் பறிபோகவில்லை. கடந்த 2008 -இல் 36,149 பேர், ஆனால் 2009 -இல் 26,890 பேர்(யு.எஸ்.ஐ.இ.எப். ஆதாரத்தின்படி). பொதுவாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்காக மாணவர்கள் அமெரிக்கா செல்ல விரும்புகிறார்கள். இளங்கலை படிப்பு: அமெரிக்காவில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு, இந்தியாவில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி எதுவோ, அதை கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல், வேறு ஒரு பாடம் இவைகளுடன் திறனாய்வு தேர்வு எழுதியிருக்க வேண்டும். (பொதுவாக &'சாட்&' தேர்வு). சேர்க்கை முறை: * பல்திறன் செயல்பாடுகளில் விண்ணப்பதாரர் கலந்துகொண்ட விவரங்களைப் பற்றி மதிப்பிட்டு தரத்தை நிர்ணயித்தல். * சாட் ஐ, எ.சி.டி. மற்றும் சாட் தேர்வுகளில் விண்ணப்பதாரரின் செயல்பாட்டை வைத்து நிர்ணயித்தல். முதுகலை படிப்பு: அமெரிக்க இளங்கலை படிப்பு 4 வருடங்களைக் கொண்டது. இந்திய இளங்கலை படிப்பு 3 வருடங்களைக் கொண்டது. எனவே அமெரிக்காவில் முதுகலை படிப்பில் சேருகையில், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு வருடம் படிக்க வேண்டும் அல்லது இந்தியாவில் முதுகலை படிப்பு வரை முடித்திருக்க வேண்டும், அல்லது இளங்கலைக்கு பிறகு ஒரு வருட டிப்ளமோ படிப்பும் முடித்திருக்கலாம். மொத்தத்தில் முதுகலைக்கு அங்கே 16 வருட படிப்பு இருக்க வேண்டும். சேர்க்கை முறை: * பல்திறன் செயல்பாடுகளில் விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்ட விவரங்களை மதிப்பிடுவதோடு, அவரிடம் நல்ல தலைமை பண்பையும் எதிர்பார்க்கிறது. * ஜி.ஆர்.இ/ஜிமேட்/டோபெல்/ஐ.இ.எல்.டி.எஸ்/பி.டி.இ.எ. போன்றவற்றின் மதிப்பெண்கள். * கலை மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள அனுபவம். முனைவர் பட்ட படிப்பு: பொதுவாக முதுகலை படிப்பை முடித்தவர்கள் அதே துறையில் முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்கிறார்கள். முதுகலை படிப்பை உள்ளடக்கிய முனைவர் படிப்புகளும் உள்ளன. அத்தகைய படிப்பிற்கு அதே துறையில் இளங்கலை படித்திருந்தால் போதும். சேர்க்கை முறை: * ஆய்வு செய்தல் மற்றும் ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான உங்கள் திறனை நிரூபித்தல் * ஜி.ஆர்.இ. பொது மற்றும் ஜி.ஆர்.இ. பாட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள். விசா பெறுவதற்கான நடைமுறை ஆலோசனைகள்: மாணவர்கள் குடியேற்றமல்லாத விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் கிடைக்கும் சேர்க்கை அனுமதி மட்டுமே விசா கிடைப்பதற்கான உத்திரவாதம் ஆகிவிடாது. வழக்கமாக மாணவர்கள் "எப்-1" வகையில் சேர்க்கப்படுகிறார்கள். எக்ஸ்சேஞ் விசிட்டர் படிப்பில் சேருபவர்கள் "ஜே" விசாவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். உங்களை நேர்காணல் செய்யும் அதிகாரி மிகவும் பயிற்சி பெற்றவராக இருப்பார். எனவே நம்பிக்கையுடனும் கவனத்துடனும் பதிலளிக்கவும். பதிலளிக்கும்போது தேவையான ஆவணங்களை வைத்திருந்தால் வசதியாக இருக்கும். நேர்காணல் 5 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். நேர்காணலுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் நேர்காணலுக்கான முக்கிய மாதங்கள். நேர்காணலின்போது வைத்திருக்க வேண்டிய விண்ணப்பங்கள்: * உங்கள் பாஸ்போர்ட் * உங்கள் விண்ணப்ப புகைப்படம் * படிவம் I-120௦ * எச்.டி.எப்.சி. விசா விண்ணப்ப கட்டண ரசீதுகள் மற்றும் செவிஸ் கட்டண ரசீது * வி.எப்.எஸ். அனுமதி கடிதம் * இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் * ஏற்பு கடிதம் * டோபெல்/சாட்/ஜி.ஆர்.இ./ஜிமேட் மதிப்பெண் அறிக்கைகள் * உங்கள் கல்விக்கான நிதி ஆவணங்கள் அவசியம் தெரிய வேண்டியவை: நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் சேர்ந்தவுடன் படிவம் I-20௦ என்ற அரசு படிவம் உங்களுக்கு வழங்கப்படும். செவிஸ்(ஸ்டூடன்ட் அண்ட் எக்ஸ்சேஞ் விசிட்டர் இன்பர்மேஷன் சிஸ்டம்) என்பது சேரக்கூடிய மாணவர்களின் விவரங்கள் பற்றிய மின்னணு சரிபார்ப்பு முறை ஆகும். விசா விண்ணப்ப கட்டணத்துடன் செவிஸ் கட்டணத்தை ஒருமுறை கட்ட வேண்டும்.