பாரம்பரிய கலைகளுக்கான பல்கலைக்கழகம்
கைவினைக் கலைஞர்களுக்கு பாடத்திட்டங்களை உருவாக்கி, அதன்மூலம் அவர்களை பட்டதாரிகளாக்கும் வகையில் ஒரு பல்கலைக்கழகத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென மக்களவை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "இதுபோன்றதொரு &'தொழிலாளர் பல்கலைக்கழகம்&', சமுதாயத்தில் பரவலாக உட்பொதிந்திருக்கும் பாரம்பரிய கலை திறமைகளை சிறப்பு அங்கீகாரம் உள்ளதாக மாற்றி, அத்துறைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு படிப்பு அங்கீகாரங்களை கொடுத்து, மேற்கத்திய மயமாகி வரும் இந்தியாவில், பாரம்பரிய தன்மைகளை காப்பதற்கு பேருதவி புரியும். பொதுவாக வாழ்வில் நலிந்திருக்கும் திறன்வாய்ந்த கைவினைஞர்களுக்கு படிப்பு அந்தஸ்து வழங்குவதற்காகவே உருவாக்க வேண்டிய இப்பல்கலையைப் பற்றி மத்திய அரசிடம் பேசியுள்ளேன். விரைவில் இதுகுறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்று நம்புகிறேன். ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட மற்றும் நடைமுறையிலுள்ள கற்பித்தல் முறையில் பாரம்பரிய அறிவையும், கைவினைஞர் தன்மையையும் சேர்க்க இந்த திட்டம் உதவும். இப்பல்கலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தங்களுக்கு என்ன தெரியுமோ, அதன்மூலம் அங்கே பயிலும் மாணவர்கள் பட்டம்பெற உதவுவார்கள். இப்பல்கலை இளநிலையிலிருந்து முனைவர் பட்டம் வரையிலான படிப்புகளை கொண்டிருக்கும்" என்றார். .