சென்னையில் வழிகாட்டி நிகழ்ச்சி
சமூக அக்கறையுடன் பல நல்ல செய்திகளை வெளியிடுவதில் புகழ்பெற்று விளங்கும் தன்னிகரற்ற தேசிய தமிழ் நாளிதழ் "தினமலர்", உயர்கல்வி விஷயத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக "வழிகாட்டி" நிகழ்ச்சியை வருடா வருடம் நடத்துகிறது. எனவே இந்த 2011ம் ஆண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை மற்றும் கோவை நகரங்களைத் தொடர்ந்து, தற்போது தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி தொடர்பான அனைத்துவித தகவல்களையும் அபரிமிதமாய் வழங்கும் "கல்விமலர்.காம்" சார்பில் ஒரு ஸ்டால் அமைக்கப்பட உள்ளது. எனவே வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்கள் "கல்விமலர்.காம்" ஸ்டாலுக்கு வந்து பயன்பெறலாம்.