டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு கோவையில் 6,955 பேர் எழுதினர்
கோவை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வை, கோவையில் 6,955 பேர் எழுதினர்.பணியிடங்களின் தர நிலையைப் பொறுத்து, பல்வேறு குரூப்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில், சப் கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி, குரூப்1 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.கோவை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 455 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு நடந்தது. கோவையில் 35 கல்லூரிகள், 3 பள்ளிகள் என மொத்தம் 38 மையங்களில் தேர்வு நடந்தது. 6,955 பேர் தேர்வெழுதினர். 4,500 பேர் ஆப்சென்ட் ஆகினர். 60.72 சதவீதம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.இதில் தேர்ச்சி பெறுபவர்கள், பிரதான எழுத்துத் தேர்வை சந்திக்க வேண்டும்.