உள்ளூர் செய்திகள்

தமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய விருது

ஆசிரியர் பணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக தேசிய அளவில் வழங்கப்படும் விருதுக்கு, தமிழகத்தில் இருந்து ஆறு ஆசிரியைகள் உட்பட 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்., 5ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், விருதுகளை வழங்குகிறார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. கல்வியிலும், பள்ளி மேம்பாட்டிலும் சிறப்பாக சேவையாற்றும் ஆசிரியர்கள், ஆண்டு தோறும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு செப்., 5ம் தேதி தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருதுகள், ரொக்கப் பரிசுகள், பாராட்டு மடல் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசாக 5,000 ரூபாயும், தேசிய அளவில் தேர்வு பெறும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்கு 22 பேரும், மாநில அளவிலான விருதுக்கு 300க்கும் மேற்பட்டோரும் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநில அளவிலான விருதுக்கு, தற்போது ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இறுதி செய்யப்படும். இந்நிலையில், தேசிய விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆறு ஆசிரியைகள் உட்பட 22 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்: 1. கேத்தரீன் விமலா, தலைமை ஆசிரியை, நகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவள்ளூர். 2. அருள் மேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஜோசப் துவக்கப்பள்ளி, கிழக்கு தாம்பரம், சென்னை. 3. மூர்த்தி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரடாப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம். 4. சக்திவேல், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டம். 5. சண்முகம், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேலப்பனபட்டு, நெய்வேலி.6. கண்ணையன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜமீன் பெரையூர், பெரம்பலூர் மாவட்டம். 7. சூடாமணி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாச்சூர், திருச்சி மாவட்டம். 8. காந்தி, தலைமை ஆசிரியர், சோலை ஆண்டவர் வைத்திய சாலை துவக்கப்பள்ளி, கோத்தாரி, சிவகங்கை மாவட்டம். 9. காளிமுத்தன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சுப்புதேவன்வலசை, ராமநாதபுரம் மாவட்டம். 10. ஆரோக்கியசாமி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பித்தலைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.11. ரங்கநாயகி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.செட்டியாபட்டி, மதுரை மாவட்டம். 12. சண்முகம், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கனகாபுரம், ஈரோடு மாவட்டம். 13. ஏகாம்பரம், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாயகன்சோலை, நீலகிரி மாவட்டம். 14. நெல்லை வடுவு, இடைநிலை ஆசிரியை, ராமையா பாகவதர் நினைவு செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, திருச்செந்துõர், துõத்துக்குடி மாவட்டம். 15. மாணிக்கம், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாசிநாயக்கன்பட்டி, சேலம் மாவட்டம். இடைநிலை ஆசிரியர்கள்:1. கருப்பசாமி, முதுகலை ஆசிரியர் (தமிழ்), ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, மணலி புதுநகர், சென்னை மாவட்டம். 2. சவுந்தரராஜன், தலைமை ஆசிரியர், சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை. 3. சுப்ரமணியன், தலைமை ஆசிரியர், சபர்பன் மேல்நிலைப்பள்ளி, ராம்நகர், கோவை. 4. முத்தையா, தலைமை ஆசிரியர், ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி, நெல்லை மாவட்டம்.5. போஸ், முதுகலை ஆசிரியர், கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி, வள்ளியூர், நெல்லை மாவட்டம். 6. சூசைராஜ், தலைமை ஆசிரியர், சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை மாவட்டம். 7. பேபி சரோஜா, முதல்வர், எஸ்.சி.எஸ்., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்