தமிழக அணிக்கு 37 பதக்கங்கள்
சென்னை: தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணிக்கு 37 பதக்கங்கள் கிடைத்தன. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் 41வது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடந்தது. அதில், தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில், தமிழக அணிக்கு 13 தங்கப்பதக்கம், ஏழு வெள்ளி பதக்கம், 17 வெண்கல பதக்கம் என 37 பதக்கங்கள் கிடைத்துள்ளன.