உள்ளூர் செய்திகள்

கல்லூரிகளில் புதிதாக 39 படிப்புகள் துவக்கம்

புதுச்சேரி : அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் புதிதாக 39 படிப்புகள் துவங்கப்பட்டுள்ளது.நீட் அல்லாத இப்படிப்புகளில் முன்னுரிமை கொடுக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கு நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் நிர்வாகம் கடந்த மே 17ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்றது. 13,268 பேர் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல், தரவரிசை பட்டியல் சென்டாக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் புதிதாக 39 படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பி.எஸ்.சி.,படிப்பில் ஹாஸ்பிட்டாலிட்டி ஓட்டல் நிர்வாகம், பி.டெக்.,படிப்பில் இன்பார்மேஷன் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பார்மேஷன் டெக்னாலஜி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பி.ஏ., படிப்பில் கிரிமினாலஜி போலீஸ் நிர்வாகம், டிப்ளமோ படிப்பில் பிட்னஸ் மேனேஜ்மென்ட், போலீஸ் சயின்ஸ், டென்டல் மெக்கானிக், டென்டல் ஹைஜீனிஸ்ட், டி.டி.டி.,ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி, சானிட்டர் இன்ஸ்பெக்டர் துவக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.சி., படிப்பில் கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி. கார்டிக் லேப் டெக்னாலஜி படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நீட் அல்லாத இப்படிப்புகளில் சேர விரும்பம் உள்ள மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் உள்ளே நுழைந்து முன்னுரிமை கொடுக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்