நுால் அரங்கேற்றம்
மதுரை: மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியும் இணைந்து, தமிழ்க்கூடல், நுால் அரங்கேற்றம் நிகழ்ச்சியை நடத்தின. தமிழ்வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் தலைமை வகித்தார். ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனியசாமி முன்னிலை வகித்தார்.இதில் கவிஞர் ஜீவி, தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார். பழனிக்குமார், நடராஜன், புஷ்பலதா, சுந்தரபாண்டியன் நுால் மதிப்புரை வழங்கினர். ராஜேஸ்வரி எழுதிய ஆய்வுநுால், மு.மேத்தாவின் கவிதைகளில் எதிர்ப்பரசியல், பிரேமா எழுதிய கட்டுரையான ஆக்கமும் அதன் தாக்கமும், கவிஞர் மகாலட்சுமியின், எட்டுப்போட்டு பழகிய கவிதைகள், அறிவுமதி எழுதிய, ஆழினி ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டன. தமிழ்ப் புத்தக பூங்கா பொறுப்பாளர் சிந்து நன்றி கூறினார்.