உள்ளூர் செய்திகள்

தொல்லியல் பயிற்சி

மதுரை : செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு களப்பயணத்துடன் கூடிய ஒருநாள் தொல்லியல் பயிற்சி இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு பேசினர். பின் களப்பயணமாக கொங்கர் புளியங்குளம் மலை குகை பகுதிக்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்து சாந்தலிங்கம், ராஜகுரு விளக்கினர். கல்வி அலுவலர் ஜவஹர், தலைமையாசிரியர் கணபதி சுப்பிரமணியன் பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்