யுஜிசி எச்சரிக்கை
புதுடில்லி: முறையான அனுமதி பெறாமல் யுஜிசி லோகோவை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது. இது குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:முறையான அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசியின் லோகோவை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவது கவனத்துக்கு வந்துள்ளது. அனுமதியின்றி பெயர், லோகோ மற்றும் வலைதளத்தை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.