மாணவர்களுக்கு பாராட்டு
திருப்பத்தூர்: பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் சாதனை படைத்தனர்.தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சர் விகா 486, சஞ்சய் முத்துவீரன் 485 நித்திஸ்ஷா 478, திபிகா 468, நவ்பால் அகமது 464 மதிப்பெண் பெற்றனர். 450க்கு மேல் 6,400க்கு மேல் 41 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் ஜலஜா குமாரி, வழிகாட்டி சுரேஷ்கண்ணா, ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.