உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு சீருடைகள்

நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்திலும், ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிச் சீருடைகள் வாங்குவதற்கு தலா 500 ரூபாய் வழங்க டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் சீருடை, ஷூ போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களுக்கு மிகவும் பயனடைவார்கள். இத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தபட உள்ளது. இக்னோவின் உருது மற்றும் அரபிக் படிப்புகள் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் இளநிலை பட்டப்படிப்பில் உருதும், சர்டிபிகேட் படிப்பில் அரபியும் வழங்குகிறது. இளநிலைப் பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ்2 வில் உருது மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், மொழி பாடங்களில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். சர்டிபிகேட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 18வயது முடிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு ஆண்டிற்கு, ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் இந்த படிப்பிற்கான சேர்க்கை மற்றும் வகுப்புகள் துவங்கும். www.ignou.ac.in என்ற இணையதளத்தில் இதற்கான கையேடுகளை பெறலாம். விவரங்களுக்கு www.ignou.ac.in வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் பிறந்த ஊரைப் பற்றிய வரலாறு தெரியாமல் உள்ளதாக தனியார் நிறுவனங்களின் வேலைநியமன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தங்களின் சொந்த ஊரின் சிறப்புகள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இதுதவிர அவர்கள் ஊரில் வாழ்ந்த மற்றும் வாழும் தலைவர்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பான கேள்விகளே பல்வேறு போட்டி தேர்வுகள், நேர்முக தேர்வுகள் போன்றவற்றில் கேட்கப்படுகின்றன. இவற்றை ஏதோ வரலாறு பாடத்தை படிக்கும் மாணவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை. இவற்றை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். நூலகம் மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி இத்தகைய விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். வரலாற்றை படிப்பதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல் விரிவடையும் என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிபட கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்