பிளஸ் 1 அரியர் மாணவருக்கு சிக்கல்
பிளஸ் 1 பொதுத்தேர்வு அமலானபோது பாடங்களில் தோல்வியை தழுவினாலும் உயர்கல்வி போல் அரியர் தேர்வெழுத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டிலேயே பிளஸ் 2 தேர்வும் எழுதலாம்.கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியோருக்கு உடனடி பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அத்தேர்விலும் தோல்வியை தழுவியோருக்கு செப். மாதம் துணை பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.தற்போது இந்தாண்டிலும் பிளஸ் 1 பொதுத்தேர்வு அறிவிக்காததால், அரியர் மாணவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், கொரோனா பரவுவதால் சில மாணவர்கள் பிளஸ் 1 உடனடி பொதுத்தேர்வில் பங்கேற்கவில்லை.இந்த மாணவர்கள் நடப்பாண்டிலும் அரியர் வைத்த பாடங்களில் தேர்வெழுத முடியாத நிலை உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்ததும், அரியர் மாணவர்களுக்கு உடனடி பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் இவர்கள் உயர்கல்வியில் சேர்வது கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.