உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று காலாண்டுத்தேர்வு துவக்கம்

தேனி: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான காலண்டுத்தேர்வு இன்று துவங்கி செப்.,27 வரை நடக்கிறது.தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத்தேர்வு இன்று துவங்குகிறது. பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கு இன்று மொழிப்பாடத்தேர்வு, செப்.,19ல் ஆங்கிலம், மற்ற தேர்வுகள் செப்.,20,21, 22,25,27 வரை நடக்கிறது. பிளஸ் 2 வகுப்புகளுக்கு மதியம் 1:15 மணிக்கு தேர்வு துவங்கி மாலை 4:30 மணி வரை நடக்கிறது. பிளஸ் 1 வகுப்புகளுக்கு காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:45 வரை நடக்கிறது.ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்.,19ல் மொழிப்பாடத்தேர்வுடன் காலாண்டுத்தேர்வு துவங்கி செப்.,27 ல் முடிகிறது. தேர்வு 6 முதல் 8 ம் வகுப்பு வரை காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. ஒன்பது, பத்தாம் வகுப்பிற்கு மதியம் 2:00 மணிக்கு துவங்கி மாலை 4:30 மணி வரை நடக்கிறது. தேர்வு வினாத்தாள்களை வினாத்தாள் மையங்களில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்