மாற்றுத்திறனாளிகளுக்காக 12ல் தனியார் வேலைவாய்ப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து, தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும், மாற்றுத்திறனாளிகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெற்றோருடன் கலந்து கொள்ளவும், சுய தொழில் புரிபவர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்நிகழ்ச்சி வரும், 12ம் தேதி (சனிக்கிழமை) காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை, சிங்காநல்லுார் வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வித்தகுதி சான்றுகள் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.