உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்து கொண்டனர்.மாவட்ட தேர்வுத்துறை அலுவலர்கள் கூறுகையில், ஹால்டிக்கெட் பதிவிறக்கம் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குனரகம் தரப்பில் இருந்து ஏற்கனவே விரிவான வழிகாட்டுதல்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தலைமை ஆசிரியர்கள், தேர்வு நாளில் மாணவ, மாணவியருக்கு ஹால் டிக்கெட் வழங்குவர். பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இருதேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்