பிளஸ் 2 மாணவர்களுக்கானதிசைகாட்டி நிகழ்ச்சி
பெரியகுளம்: தினமலர் நாளிதழ் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மிக்க கல்லூரிக் கல்விக்கு வழிகாட்டும் திசைகாட்டி நிகழ்ச்சி பெரியகுளம் ராமானுஜம் அரங்கில் நாளை (ஜூலை 13ல்) நடக்கிறது. இதில் பங்கேற்றால் எந்த கல்லூரியில் சேரலாம் என மாணவர்கள் தெளிவான முடிவு எடுக்க முடியும். காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் இந்திய பிலிம் டிவிஷன் சார்பில் மாணவர்களுக்கான குறும் படங்கள், மற்றும் அனிமேஷன் படங்கள் திரையிடப்பட உள்ளன. தற்போது பிளஸ் 2 முடித்த மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.