ஆக., 21 முதல் செப்., 2 வரை பி.யு.சி., துணைத்தேர்வுகள்
பெங்களூரு: ஆகஸ்ட் 21 முதல், செப்டம்பர் 2 வரை, இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு நடக்கவுள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் வசதிக்காக, துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வாணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.அமைதியான, நேர்மையான முறையில் தேர்வு நடத்தும் நோக்கில், தேர்வு மையங்களின் சுற்றுப் பகுதிகளில், 200 மீ ட்டர் எல்லையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில், நகல் எடுக்கும் கடை, சைபர் சென்டர், டைப்பிங் சென்டர்களை மூட வேண்டும். அரசு பஸ்களில் தேர்வு நுழைவு சீட்டை காண்பித்து, இலவசமாக பயணிக்கலாம்.தேர்வு விதிமுறைகள்:* தேர்வு மையங்களுக்கு, மொபைல் போன் உட்பட எந்த எலக்ட்ரிக்ரானிக் பொருட்களையும், கொண்டு வரக்கூடாது*ப்ளூ டூத் டிவைஸ் கை கடிகாரம், எலக்ட்ரானிக் கால்குலேட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண கால்குலேட்டருக்கு மட்டும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளக் கூடாது*தேர்வு மையங்களுக்குள், அறிமுகமில்லாத ஆட்கள் நுழைவது, படம் பிடிப்பது கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.