கூடங்குளம் 3வது திட்டம் டிசம்பரில் மின் உற்பத்தி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்திற்கு, தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகள் உடைய கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது.இதிலிருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட்டும், மீத மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.கூடங்குளத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது அணு உலையில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.அங்கு, இந்தாண்டு டிசம்பருக்குள் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக, இந்திய அணுமின் கழகம் தெரிவித்துள்ளது. பணிகள் வேகமாக நடப்பதால், அதற்கு முன்னதாகவே, மின் உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது.நான்காவது அணு உலையில், 2027 டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.