உள்ளூர் செய்திகள்

குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.,21 முதல் செப்.,11 வரை நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமனத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. அதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்று, தரவரிசை விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இம்மாதம் 21ம் தேதி முதல் செப்.,11ம் தேதி வரை (ஆக., 29-ஓணம், செப்.,6- கிருஷ்ண ஜெயந்தி நீங்கலாக) நடைபெற உள்ளது. நடைபெறும் இடம்- சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்