உள்ளூர் செய்திகள்

மார்ச் 9, 10ல் மாவட்ட அளவிலான ஓவியம், கிராமிய நடனப்போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான போட்டிகள் மார்ச் 9, 10 நாட்களில் காலை 10:00 மணி முதல் நடக்கிறது.மார்ச் 9ல் ஒவியம், கிராமிய நடனம் போட்டிகளும், மார்ச் 10ல் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகள் நடைபெற உள்ளது. 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையவேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வழங்கப்படும்.முதல் பரிசு ரூ.6000, இரண்டாமிடம் ரூ.4500, மூன்றாமிடம் ரூ.3500 வழங்கப்படும். போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 95664 73769, 94432 07376 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !