உள்ளூர் செய்திகள்

எச்1பி விசா விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்த டிரம்ப் திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்-1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர் உயர்த்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்.அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவுக்கு உயர்த்தி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட வேண்டி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.முன்னதாக ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக்கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்