10ம் வகுப்பு பொதுத்தேர்வு 33,031 மாணவர்கள் எழுதினர்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று துவங்கிய, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 33 ஆயிரத்து 31 மாணவர்கள் தேர்வெழுதினர்.தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்திற்கான தேர்வு நடந்தது. தொடர்ந்து வரும், 16ம் தேதி ஆங்கிலம், 25ம் தேதி கணிதம், 30ம் தேதி அறிவியல், ஏப்., 2ம் தேதி சமூக அறிவியல், ஏப்., 6ம் தேதி விருப்ப மொழி பாடத்திற்கான தேர்வு நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த மொழிப்பாட தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள்என 33 ஆயிரத்து 438 மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் 407 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 33 ஆயிரத்து 31 மாணவர்கள் மட்டும் தேர்வெழுதினர். 11 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்விலிருந்து விலக்கு பெற்றனர். மேலும் கடலுார் கேப்பர் மலை மத்திய சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 35 கைதிகளும் தேர்வெழுதினர்.இந்த தேர்வு, வரும், ஏப்., 6ம் தேதி நிறைவு பெறுகிறது.