1,100 பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை; இதுதான் கல்வி வளர்க்கும் வளர்ப்பா?: அன்புமணி
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமே தலைமை ஆசிரியர்கள் தான். 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை, தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல் படுத்த வேண்டும்.ஆனால், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 1,100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.தி.மு.க., அரசு நினைத்திருந்தால், இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியிருக்க முடியும்.ஆனால், தி.மு.க., அரசு கடந்த ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு இதுவே முக்கிய காரணம்.தலைமை ஆசிரியர்களை கூட நியமிக்காமல், 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என, கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது. தமிழக கல்வித்துறை மிக மோசமாக சீரழிந்துள்ளது. இதற்கான தண்டனையை, தி.மு.க.,வுக்கு மக்கள் வழங்குவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.