உள்ளூர் செய்திகள்

22 ஆண்டுகளாக திறந்தவெளியில் சத்துணவு தயாரிக்கும் பள்ளி

கொட்டாம்பட்டி ஒன்றியம் மணப்பச்சேரி ஊராட்சிக்குட்பட்டது வெள்ளாலபட்டி கிராமம். இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 230 மாணவர்கள் படிக்கின்றனர். மதிய உணவு தயாரிக்கும் சத்துணவுக் கூடம் பழுதடைந்து பாதுகாப்பற்று இருப்பதால், திறந்தவெளியில் சத்துணவு சமைக்கப்படுகிறது. வகுப்பறைகள் அருகே குறுகிய இடத்தில் சமைக்கப்படுவதால் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி: ஆரம்பத்தில், சிறிய சமையலறை மற்றும் ஸ்டாக் ரூம் கட்டித் தரப்பட்டது. பின், எந்த மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளாததால், சில ஆண்டுகளிலேயே கட்டிடத்தின் மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டு பயன்படுத்தமுடியாத அளவிற்கு பழுதடைந்தது. அதனால், 1991 முதல் அரிசி, பருப்பு மூடைகளை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு வெளியில் கூரை போட்டு சமைத்து வந்தோம். கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்குப் பின், கூரையைப் பிரிக்கக் கூறியதால், அன்று முதல் திறந்தவெளியிலேயே சமைத்து வருகிறோம். மழைக் காலங்களில் கட்டிடத்தில் மழைநீர் ஒழுகி, உள்ளேயிருக்கும் அரிசி பருப்பு மூடைகளில் தண்ணீர் சென்று அவை வீணாகின்றன. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. சமையலறைக் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்