உள்ளூர் செய்திகள்

3வது கல்விக்குழு வேண்டும்: தனியார் பள்ளிகள்

மதுரை: &'பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க மூன்றாவது கல்விக்குழு அமைக்க வேண்டும்&' என தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அளவில் மாவட்ட வாரியாக இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜோசப்சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர்.* அரசு, உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியதைப் போல, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். * தனியார் பள்ளிக் கட்டணங்களை கோவிந்தராஜன், ரவிராஜ பாண்டியன் குழுக்கள் சரிவர பரிசீலனை செய்யாமல் நிர்ணயித்தன. இதனால் பெற்றோர், பள்ளிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதை சரிசெய்ய, மூன்றாவது கல்விக்குழு அமைக்க வேண்டும். * ரவிராஜ பாண்டியன் குழு பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர் சம்பளம், மின்சார கட்டணம், தண்ணீர் வரி, தொலைபேசி, சில தேய்மானங்கள், தபால் கட்டணத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது. மின்சார பொருள் பழுதுபார்ப்பு நிதிஒதுக்கீடு, பள்ளி, இடம் குத்தகை கட்டணம், பி.எப்., காப்பீட்டு திட்டம், பணிக்கொடை, கம்ப்யூட்டர் புதுப்பித்தல் நிதிஒதுக்கீடு, வங்கிக் கடன், பள்ளிக் கட்டட காப்பீடு திட்டம் அங்கீகாரம் புதுப்பித்தல், ஆய்வுக் கட்டணம் உள்பட பலவற்றை கணக்கில் எடுக்கவில்லை. இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயித்தது போல, மெட்ரிக் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். * பேராசிரியர் சிட்டிபாபு கமிட்டி அறிக்கையில் கூறிய பள்ளி கட்டட நில அளவைகளை ரத்து செய்ய வேண்டும். * மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்பு குறிப்பிட்டபடி நிலப்பரப்பு, உள்கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்து தர வேண்டும். * பள்ளிகளுக்கான இடத்திற்கு குத்தகை ஒப்பந்தம், அரசு அலுவலகத்தில் சான்றிதழ்கள், தொடர் அங்கீகாரம் மூன்றாண்டுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது. ஆனால் இப்பள்ளிகளுக்கான குத்தகை நிபந்தனை 30 ஆண்டுகள் என விதித்துள்ளனர். எனவே குத்தகை கால அளவையும் மூன்றாண்டாக நிர்ணயிக்க வேண்டும். * பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைந்து புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்