உள்ளூர் செய்திகள்

கோர் இன்ஜினியரிங் அவசியம்!

'கோர் இன்ஜினியரிங்' பாடப்பிரிவுகளுடன், இன்றைய மாணவர்கள் அதிகம் விரும்பும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, பி.இ.,-மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உடன் ஏ.ஐ., அல்லது எம்.எல்., என படிப்புகள் இணைத்து வழங்கப்பட வேண்டும். அதேநேரம், கோர் இன்ஜினியரிங் துறைகளில் உரிய வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வி துறை சார்பில், 'கோர் இன்ஜினியரிங்' படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.கோர் இன்ஜினியரிங் துறைகளில் சாதித்த தொழில் வல்லுனர்களை, இன்றைய மாணவர்களுக்கு அதிகளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் அத்தகைய துறைகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்