உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை

வால்பாறை: வால்பாறையில், 'நீட்' தேர்வு மையம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை மலைப்பகுதியில் 'நீட்' தேர்வு மையம் இல்லாததால், மாணவர்கள் கோவைக்கு தேர்வு எழுத செல்ல வேண்டிய நிலை உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையில் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் 'நீட்' தேர்வு மையம் மட்டும் அமைக்கப்படவில்லை.இதனால், 100 கி.மீ., தொலைவில் உள்ள கோவைக்கு, ஒரு நாள் முன்னதாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே மலைப்பகுதியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 'நீட்' தேர்வு மையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்