உள்ளூர் செய்திகள்

42 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கோவை: அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,408 பேரில், 10,310 பேர் (99 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்தனர்.துணைத்தேர்வு எழுதிய 945 பேரில், 815 பேர் (86 சதவீதம்) உயர்கல்வியில் இணைந்தனர். துணைத்தேர்வுக்குப் பின் உயர்கல்வி சேர்க்கையில் கோவை மாவட்டம் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இது வரை ஒற்றை பெற்றோர், பெற்றோர் இல்லாத மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 148 மாணவர்களுக்கு, ரூ.30 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.10 தகுதியான மாணவர்களுக்கு கல்லுாரிகளின் ஒத்துழைப்புடன் இலவச உயர்கல்வி வழங்க பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக, உயர்கல்வி தொடர பொருளாதார உதவி தேவைப்பட்ட 42 மாணவர்களுக்கு, என்.ஜி.ஓ., நிறுவனங்கள் ஆதரவுடன் உதவித்தொகை வழங்கப்பட்டது.கலெக்டர் பவன்குமார் ரூ.6.26 லட்சம் கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு நேற்று வழங்கினார். துணை கலெக்டர் மற்றும் உயர்கல்வி கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்