உள்ளூர் செய்திகள்

ஜன.5ல் பள்ளி மேலாண்மை கூட்டம்

திண்டுக்கல்: ஜன.,5ம் தேதி 1325 பள்ளிகளில் போதை விழிப்புணர்வு குறித்த பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற உள்ளது.மாவட்ட கல்வி அலுவலர் நாசருதீன் கூறியதாவது: பள்ளிகளில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், 10,11,12 ல் தோல்வியடைந்தவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து நடவடிக்கை எடுக்க, ஜன.5ல் 1325 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. குழுவில் ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர் இருப்பார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்