50 ஆண்டுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்
வேலூர்: வேலூரிலுள்ள கிருஷ்ணசாமி முதலியார் மேல் நிலைப்பள்ளியில் 1975-76ல் 11வது படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினர்.70க்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கு 90 வயது.இந்த மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரிண்டர், ஸ்கேனர் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.