உள்ளூர் செய்திகள்

ஏப்.6ல் விடுமுறை அளிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

தேனி: மேல்நிலை முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஏப்.7ல் துவங்க உள்ளதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு செல்லாமல் விலக்கு அளித்து ஏப்., 6 ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனரகம், பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியிருப்பதாவது: வாரம் முழுவதும் ஓய்வின்றி விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மதிப்பீட்டு மையத்திற்கு ஞாயிறு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மறுநாள் பணிகளை துவங்க ஏதுவாக இருந்தது. தற்போது தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிறு அன்று ஏப்.7ல் துவங்குவதால் சனிக்கிழமை (ஏப்.6) மதிப்பீட்டு பணிகள் முடிந்து விடுமுறை இன்றி பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை இல்லாமல் பணியாற்றினால் முக்கிய பணிகளான தேர்தல் பணியும், தேர்வுப் பணியிலும் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் ஓய்வில்லாமல் வேலை செய்வதால் கவனக்குறைவு ஏற்படும். இதனால் ஏப்., 6ல் மதிப்பீட்டு மையப்பணியில் இருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்