7 தனியார் பல்கலை சட்ட மசோதா தாக்கல்
சென்னை: ஏழு தனியார் பல்கலைகளுக்கு சட்ட ஒப்புதல் வழங்க, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில், ஏழு தனியார் பல்கலைகளுக்கு, தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு சட்ட ஒப்புதல் அளிக்கும் வகையில், சட்டசபையில், தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மசோதா தாக்கல் செய்தார்.அதில், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை; விழுப்புரம் ஸ்ரீஅனுசுயா பல்கலை; துாத்துக்குடி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை; விருதுநகர் என்.எம்.வி., பல்கலை; சென்னை சோழிங்கநல்லுார் ஜேப்பியார் பல்கலை; விழுப்புரம் தட்சசீலா பல்கலை மற்றும் திருநெல்வேலி ஜாய் பல்கலை ஆகியவற்றுக்கு மசோதா வழியே ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.