9 நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் 40,060 பேர்!
வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 9,534 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 137 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 23.80%. ஒன்பதாவது நாளில் மட்டும், 4,344 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,229 பேர், கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர் போக, 3,102 பேர் ஒதுக்கீடு பெற்றனர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஆப்சென்ட் விகிதம் 28.29%. கவுன்சிலிங் தொடங்கிய ஆரம்ப நாட்களுடன் ஒப்பிடுகையில், தற்போது ஆப்சென்ட் விகிதம் கூடி வருவதை காணலாம். இன்னும் நாட்கள் செல்ல செல்ல, ஆப்சென்ட் விகிதம் மேலும் மேலும் அதிகரிக்கும். தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொழிற்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாட்கள் முடிவில், 2,162 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். மொத்தமாக அழைக்கப்பட்டவர்கள் 2,808 பேர். வராதவர்களின் எண்ணிக்கை 632 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 14 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 22.51%.