உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள் கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சி

2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள் கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் தொடர் முயற்சியால், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களில், சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரும் சந்திப்பாக கோவைதான் உள்ளது.இருப்பினும், கோவையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, ரயில்கள் குறைவாக இருப்பதால், பஸ்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் தொடர்கிறது. அதேபோல, தென் மாவட்டங்களுக்கான பழைய ரயில்கள் இன்னும் இயக்கப்படாததால், இங்குள்ள பல லட்சம் மக்கள், தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்கு பஸ்களையே நம்பியுள்ளனர்.இதனால் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு, புதிய ரயில்கள் இயக்கம் ஆகிய கோரிக்கைகளை, இங்குள்ள தொழில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளைச் சந்தித்து, மீண்டும் மீண்டும் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர். இதற்கு படிப்படியாக பலனும் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய ரயில் சேவைகள் இதனால் துவக்கப்பட்டுள்ளன.கடந்த 2022 ஏப்.,23 ல்,மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை, பழனி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வாராந்திர ரயில் சேவை துவங்கியது. அதே ஆண்டு செப்., 1லிருந்து மதுரை-கோவை-மதுரை தினசரி ரயில் சேவையும் துவக்கப்பட்டது. அதேபோல 2023 ஏப்.,8ல், கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக, கடந்த டிச., 31லிருந்து, கோவை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையும் துவங்கி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை-பழனி-மதுரை-விருதுநகர் வழியாக துாத்துக்குடிக்கு வாராந்திர இரு முறை ரயில் சேவை ஜூலை 19 ல் (இன்று) துவங்கவுள்ளது.இந்த ரயில்கள் அனைத்துமே வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், நல்ல வருவாயும் அளித்து வருவதால், கூடுதல் ரயில்களை கோவையிலிருந்து இயக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை எக்மோருக்கும், பெங்களூருக்கும் இரவு நேர ரயில்களையும், கோவை - ராமேஸ்வரம் இடையே தினசரி ரயிலையும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது-நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

PURESEED2K19 Sarathy
ஜூலை 22, 2024 13:47

உடனடி தேவை: திருப்பூர் -சிங்காநல்லூர் - கோவை - போத்தனூர் - பொள்ளாச்சி மின்சார சாதாரண கட்டண இரயில் சேவை. திருப்பூர் - இருகூர் - போத்தனூர் - கோவை - துடியலூர் - பெரியநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம். இரயில் சேவை. கோவை சுற்று இரயில் போத்தனூர் - கோவை - வடகோவை - பீளமேடு - சிங்காநல்லூர் - இருகூர் - ஒண்டிப்புதூர் பழைய இடத்திலேயே இரு நடைமேடை அமைப்பை உருவாக்குதல் மட்டுமே செலவு - மாற்று இரயில் பாதை கூடுதலாக உருவாக்குதல் இரு இரயில் நடைமேடைக்காக - இவை மட்டுமே செலவினம். நஞ்சுண்டாபுரத்தில் - பழைய இரயில் பாதையை மீண்டும் நிறுவ வேண்டும். இருகூர் - ஒட்டிப் புதூர் - நஞ்சுண்டாபுரம் - கோவை - வடகோவை - பீளமேடு - சிங்காநல்லூர் - ஒண்டிப்புதூர் என வட்டப்பாதை அமைந்திடும். இரவு மற்றும் காலை வேளை இரயில் சேவையின் இடர் நாடுகளுக்கு தீர்வாக அமையும். தற்போது அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை போக்குவரத்து நெரிசலுக்கு சிறந்த உடனடி தீர்வாகும் அமையும்.


Gopalan
ஜூலை 19, 2024 13:02

None of the metre gauge days trains down south have been restored. what happened to the overnight Rameswaram express


ஆனந்த்
ஜூலை 19, 2024 10:44

மகிழ்ச்சி. இன்னும் கூடுதல் ரயில்களை இயக்கலாம். மற்ற மாவட்டங்களுக்கும் இயக்கினால் சிறப்பாக இருக்கும்


venugopal s
ஜூலை 19, 2024 10:34

எப்போதும் கோவையில் ரயில் சேவைகளுக்கு தமிழக திமுக எம் பி க்களை குறை கூறுபவர்கள் இப்போது எங்கே ஓடி ஒளிந்து கொண்டு விட்டனர்? வெளியே வரலாமே!


N Sasikumar Yadhav
ஜூலை 19, 2024 12:52

தீயமுக எம்பிக்கள் பாராளுமன்ற கேண்டினிற்காகவே அனுப்பப் பட்டவர்கள். உருப்படியாக ஏதாவது விவாதம் நடத்தியிருப்பார்களா? மத்திய மோடிஜி தலைமையிலான அரசுதான் கொடுத்தது ரயில் சேவைகள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ