உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 11 தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி?

11 தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபை தொகுதிகள் வாரியாக பதிவான ஓட்டுக்கள் அடிப்படையில், தி.மு.க., எடுத்த சர்வேயில், 11 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கும்-, பா.ஜ.,வுக்கும் இடையே 2 - 3 சதவீதம் வித்தியாசமே உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

ஓட்டுப்பதிவு முடிந்த பின் எடுக்கப்பட்ட கணக்கு அடிப்படையில், 40 லோக்சபா தொகுதிகளில், தி.மு.க., முன்னிலையில் உள்ளதாக தெரியவந்தது.ஆனால், சட்டசபை தொகுதிகள் வாரியாக பதிவாகியுள்ள ஓட்டு சதவீதம் அடிப்படையில் எடுத்த கணக்கில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 2, 3 சதவீதமும், அதிகபட்சமாக 10 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது.நாமக்கல், கோவை, திருப்பூர், சிதம்பரம், ஈரோடு ஆகிய ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே குறைந்த ஓட்டுவித்தியாசமே உள்ளது.வேலுாரில் பா.ஜ.,வும், தர்மபுரியில் பா.ம.க.,வும், திருநெல்வேலியில் பா.ஜ.,வும், விருதுநகரில் தே.மு.தி.க.,வும், தி.மு.க.,வுக்கு கடும் போட்டியை தருகின்றன. அதேபோல், வட சென்னை, காஞ்சிபுரத்திலும் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் மாறலாம் என்றும் அதில்கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அந்தவட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Senthil K
ஏப் 24, 2024 20:04

அதிமுக.. திமுக.. இரண்டுமே தொகுதிக்கு தலா.. 50 முதல் 100 கோடிகள் வரை பணம் ( வாக்காளர் உரிமைத் தொகை) கொடுத்து இருக்கிறது... திடீரென்று.. இப்படி செய்திகள் வந்தால்.. வேட்பாளர்கள்.. நெஞ்சு வெடிச்சு செத்துட போறானுங்க... எச்சரிக்கை...


venugopal s
ஏப் 24, 2024 19:09

ஜூன் நான்காம் தேதி வரை இப்படியே பேசிப்பேசி திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.


ram
ஏப் 24, 2024 14:49

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருட்டு திமுக மறுபடியும் பஜ்ஜி காபி குடிக்க புது டெல்லிக்கு போவார்கள் அவ்வளுவுதான் மிக புத்திசாலி மக்கள் உள்ள மாநிலம் போதை தமிழகம்


krishna
ஏப் 24, 2024 13:14

ADA NEENGA VERA


Jai
ஏப் 24, 2024 13:12

திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து பிஜேபியை விரட்ட தனித்தனியாக நிற்கிறார்கள். ரூ 500 ஒரு கட்சி கொடுக்கிறது ரூ200 மற்றொரு கட்சி கொடுக்கிறது. காசு வாங்கிய தமிழன் அந்த இடத்தில் மட்டும் மனசாட்சி பார்த்து மூன்று ஓட்டு ஒரு கட்சிக்கும் ஒரு ஓட்டு மற்றொரு கட்சிக்கும் போடுவான் அழியும் தமிழன். மாற்றம் வரும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து தான் போவார்கள்.


குமரி குருவி
ஏப் 24, 2024 08:30

நாற்பதும் நமக்கில்லையா..? திராவிட மாடல் கனவு மண்ணோடு மண்ணாச்சா..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை