உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நிர்மலாவிற்கு பிரதமர் பாராட்டு

டில்லி உஷ்ஷ்ஷ்: நிர்மலாவிற்கு பிரதமர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் வழக்கம் போல குறை சொல்லி வருகின்றன. சில பொருளாதார நிபுணர்கள் வரவேற்க, ஒரு சிலர் குறை கூறி வருகின்றனர்.பட்ஜெட் தாக்கலான மறுநாள், பட்ஜெட் தயாரித்த குழுவை அழைத்து சிற்றுண்டி விருந்து அளித்தாராம் பிரதமர். ரகசியமாக நடந்த இந்த விருந்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சக செயலர்கள் ஐந்து பேர், மூன்று இணை செயலர்கள், பிரதமர் அலுவலக சீனியர் அதிகாரிகள் கலந்து கொண்டனராம். இவர்கள் அனைவருக்கும் ஒரு பரிசும் அளித்தாராம் மோடி.அனைத்து அதிகாரிகளையும் தட்டிக் கொடுத்து பாராட்டினாராம் மோடி. அரை மணி நேரம் நடந்த இந்த விருந்தில் நிதி அமைச்சரை பெரிதும் பாராட்டியுள்ளாராம் பிரதமர். 'மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு, முந்தைய பட்ஜெட்கள் ஒரு முக்கிய காரணம். உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாற இந்த பட்ஜெட் உதவும்' என, சொன்னாராம் மோடி.பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் செய்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனராம். 'அரசியலில் இதெல்லாம் சகஜம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்' என, சமாதானப்படுத்தினாராம் பிரதமர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

UTHAYA KUMAR
ஜூலை 29, 2024 09:10

இந்தியாவின் கடைசி நம்பிக்கை "மோடி" ...


Santhakumar Srinivasalu
ஜூலை 28, 2024 18:53

நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை எந்த வகையில் நிறைவேற்றிய வைத்தீர்கள்? பணக்காரன்களுக்கு சாதமாகத்தான் சாதகம்!


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 16:53

பத்து வருஷத்துல பங்குச் சந்தையில் முன்னூறு சதவீத லாபம். ரியல் எஸ்டேட் விலை இன்னும் ஓஹோ. ஆனால் அதில் சம்பாதித்த லாபத்தில் எட்டில் ஒரு பங்கு வரி கட்ட மனது வரமாட்டேன்னு சொல்லுது. கேட்டா (அதில் இலட்சக்கணக்கில் சம்பாதித்த பிறகும்) அவங்க நடுத்தர வர்க்கமாம்


Swaminathan L
ஜூலை 28, 2024 14:14

நடுத்தர வர்க்கத்தினர் வருடம் மூன்று முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் விலக்குகள் கொண்ட சேமிப்புகள் அல்லது முதலீடு செய்யவில்லையெனில் 5% வருமான வரி கட்ட வேண்டும். மற்றபடி, இதர ஸ்லாட்டுகளுக்கான வருமான வரி விகிதம் குறைவு. லாங் டெர்ம் கேபிடல் கெய்ன் விஷயத்தில் இண்டெக்சேஷன் வேல்யு சேர்ப்பு இல்லை. வரி 2.5% அதிகமாகியுள்ளது. கேபிடல் கெய்ன் தொகையை மறு முதலீடு செய்தால் இவை பற்றி யோசிக்க வேண்டாம். மற்றபடி, தங்கம் விலை குறைவு என்பது நடுத்தர வர்க்கத்திற்கு ஆறுதலானது.


யாரோ
ஜூலை 28, 2024 11:55

நடுத்தர வர்க்கத்தினரின் கழுத்தை நெறிக்கும் பட்ஜெட் கொடுத்தடிமைக்காக அம்மையாருக்கு விருந்து அவசியம் தான்


G Ravichandran
ஜூலை 28, 2024 13:23

வருமான வரி கட்டுபவர்கள் வெறும் 5 கோடி மக்கள்2 சதவிகிதம் .ஆனால் மொத்தம் ஜனத்தொகை 100 கோடி .50 சதவிகிதம் வரி கட்டினால் போதுமே பட்ஜெட் கழுத்தை நெறிக்காது


R K Raman
ஜூலை 29, 2024 09:20

இரு நூறா?


venugopal s
ஜூலை 28, 2024 10:49

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு!


SUBBIAH RAMASAMY
ஜூலை 28, 2024 07:29

பொருளாதார ரீதியாக மூன்றாவது இடத்தில் மாறும் இந்தியாவிற்கு பாடு படும் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்???


Kumar
ஜூலை 28, 2024 05:16

ரகசியமா விருந்து நடந்துள்ளது அப்போ இதில் ஏதோ விஷயம் இருக்கு எதுக்கு ரகசியம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ