உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சனாதன விவகாரம் வெடிக்கும் என்பதால் வட மாநிலங்களில் ஸ்டாலின் பிரசாரம் இல்லை

சனாதன விவகாரம் வெடிக்கும் என்பதால் வட மாநிலங்களில் ஸ்டாலின் பிரசாரம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வட மாநிலங்களில், 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் போகப் போவதில்லை என்றும், தி.மு.க.,வின் சனாதன எதிர்ப்பு விவகாரமே, அதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போல, சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி' என்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dd04nc9d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு, நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'சனாதன தர்மத்தை இண்டியா கூட்டணி அவமதிக்கிறது. இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், தி.மு.க.,வும், ஓட்டு வங்கிக்காக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றன' என, பா.ஜ., தலைவர்கள் குற்றம்சாட்டினர்.இதையடுத்து, 'எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது' என, அமைச்சர் உதயநிதியை, இண்டியா கூட்டணி தலைவர்கள் அறிவுறுத்தினர். லோக்சபா தேர்தலில், வட மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த போது, அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சை மேற்கோள் காட்டி பேசினார். இது, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வடமாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரசார திட்டத்தை, தி.மு.க., மூத்த எம்.பி., தயாரித்துள்ளார். அதை கூட்டணி தலைவர்களுக்கு அனுப்பி, உள்ளனர்.வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டால், அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சை, பா.ஜ., தலைவர்கள் கிளப்புவர். இதனால், பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களின் ஓட்டுகள், இண்டியா கூட்டணிக்கு எதிராக திரும்பி விடும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டணி தலைவர்கள் கருதுகின்றனர்.அதையடுத்து, உ.பி., சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரும்,தி.மு.க., மூத்த எம்.பி., யிடம் பேசியுள்ளனர்; 'தி.மு.க., தலைவர்களின் பிரசாரம் வட மாநிலங்களில் தேவையில்லை' என்று கூறியுள்ளனர்.கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்டாலின் செல்லவில்லை. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் கணிசமாக வாழ்கிற தொகுதிகளிலும், காவிரி நீர் பிரச்னையை காரணம் காட்டி, பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. அதேபோல, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், 'சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறானது. அதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதனால், அம்மாநிலத்திலும் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Muralidharan S
மே 03, 2024 09:05

முதலில் அரைகுறை தமிழ் தவிர வேறு ஒன்று தெரியாமல் கும்மிடிப்பூண்டி கூட தாண்ட முடியாது மேலும் தமிழக இந்துக்களை போல மான ரோஷம் இல்லாதவர்கள் அல்ல பிற மாநில ஹிந்துக்கள் இதை நன்கு உணர்ந்தே அந்த அந்த மாநில கட்சிகள் திமுகவை வர விடாமல் தடுத்தது நிறுத்தி இருப்பார்கள்


அருண் பிரகாஷ் மதுரை
மே 01, 2024 22:30

ஸ்டாலினுக்கு நல்ல நேரம் போல..மூன்றாம் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடந்து இருந்தால் ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி கூட்டணி வெற்றி பெற்று இருக்காது..3 நாட்களாக பகலில் 1 மணி நேரம் இரவில் 1 மணி நேரம் மின் வெட்டு ஆரம்பம்.திமுகவும் மின்வெட்டும் பிரிக்க முடியாது.தூங்காமல் இரவில் அனைவருக்கும் விடியல் ஆரம்பம். தூங்கி என்ன விடியல் வருவது.தூங்காமல் முழித்தே இருந்தால் அதுவும் விடியல் கணக்கில் தானே வரும்.இரவும் பகலும் ஒரே விடியல் தான்..


kulandai kannan
மே 01, 2024 18:26

நல்ல நாளிலேயே தில்லை நாயகம்.


vijai
மே 01, 2024 18:03

தைரியம் இருந்தா போயிட்டு பாக்கட்டும் தமிழ்நாடு மாதிரி இல்ல அங்க


venugopal s
மே 01, 2024 16:39

வட இந்தியாவில் பகுத்தறிவு பிரசாரம் எடுபடாது.


sugumar s
மே 01, 2024 15:58

இந்தியா கூட்டணி என்று எழுதாதீர்கள் அது மிகவும் தவறு


sugumar s
மே 01, 2024 15:56

In the same spirit if people also not vote for I N D I alliance that will be great for nation


RAAJ 68
மே 01, 2024 14:31

நான் ஸ்டாலின் பேசுகிறேன் தெற்கிலிருந்து வரும் குரல் என்ற உங்கள் முழக்கம் இப்போது எங்கே போயிற்று வட இந்தியாவில் நீங்கள் நேரடியாக சென்று நான் தான் அந்த ஸ்டாலின் தெற்கிலிருந்து பேசியவன் என்று சொல்ல தைரியம் இல்லையா எல்லோரும் கேள்வி பேசுகிறார்களே இப்படியே நீங்கள் விட்டு விடலாமா உடனடியாக வடக்கே சென்று பிஜேபியை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்ட கூட்டணிக்கு வெற்றிக் கனியை பெற்றிட கிளம்புங்கள்


குமரி குருவி
மே 01, 2024 13:00

அப்போ துணை பிரதமர் பதவி ஆசையில் ஒரு லோடு மண்ணா...?


Narayanan A
மே 01, 2024 12:04

என்ன திராவிட மாடலுக்கு கெட் அவுட்டா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி