உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக காங்கிரசில் தனி கோஷ்டி உதயம்

தமிழக காங்கிரசில் தனி கோஷ்டி உதயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரசில் மாணிக் தாகூர் எம்.பி.,யின் ஆதரவாளர்கள், ராஜிவ் ஜோதி யாத்திரை வாயிலாக புது கோஷ்டியை துவக்கியுள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளிலும், பிறந்த நாளிலும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து டில்லிக்கு, ராஜிவ் ஜோதி யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.தற்போது, ராஜிவ் பிறந்த நாளை ஒட்டி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் தலைமையில், ராஜிவ் ஜோதி யாத்திரை துவங்கியது. மாணிக் தாகூர் ஆதரவாளரும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலருமான சிரஞ்சீவி, யாத்திரையை துவக்கி வைத்தார். வரும் 20ம் தேதி ராஜிவ் பிறந்த நாளில் ஜோதி யாத்திரை, டில்லியில் உள்ள வீர் பூமியை அடையும். யாத்திரையில் ஐந்து வாகனங்களில் 30 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ராஜிவ் புகழை பரப்புகிற வகையில் துண்டு பிரசுரங்களை, டில்லி செல்லும் வழியில் 40 மாவட்டங்களில் வழங்கஉள்ளனர். ஜோதி யாத்திரை துவக்க நிகழ்ச்சிக்கு, மற்ற கோஷ்டி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால், அவர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, தமிழக காங்.,கில் புதிதாக ஒரு கோஷ்டி, மாணிக் தாகூர் தலைமையில் உருவாகியிருப்பது, இந்நிகழ்ச்சி வாயிலாக வெளியே தெரிந்திருக்கிறது என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Easwar Kamal
ஆக 13, 2024 17:08

எதுக்கு இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் திமுக வளர்த்து விடுது என்பது தெரியவில்லை. தேவை இல்லாமல் விருதுநகரில் இருந்து சம்பந்தம் இல்லாத ஆட்கள் எல்லாம் வெற்றி பெற வைத்து இவனுங்க பண்ணுகின்ற அட்டூழியம் தங்க முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகள் விருதுநகருக்கு உருப்படியாக ஒன்றும் செய்வ வில்லை. அடுத்த 5 ஆண்டும் இப்படியே கடந்து போய் விடும்.


ராமகிருஷ்ணன்
ஆக 13, 2024 16:11

ஹும் எத்தனையோ கோஷ்டிகள், அதுலே இது ஒன்னு, பைசாவுக்கு பிரோசனம் இல்லை


Indhuindian
ஆக 13, 2024 10:54

பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு


theruvasagan
ஆக 13, 2024 09:24

கட்சிகளிர் கோஷ்டி இருப்பது சகஜம்தான். ஆனாலும் ஒவ்வொரு தலைவனும் பின்னாடி தொண்டனே இல்லாம புது புதுசா கோஷ்டியை ஆரம்பிப்பது கான்கிராஸ் கட்சியில் மட்டும்தான்.


VENKATASUBRAMANIAN
ஆக 13, 2024 08:06

கோஷ்டி என்றாலே காங்கிரஸ்தான்.


முருகன்
ஆக 13, 2024 06:43

கோஷ்டி எல்லா கட்சியிலும் இடங்களிலும் உள்ளது ஏதோ காங்கிரஸில் மட்டும் இருப்பது போல்


sankaranarayanan
ஆக 13, 2024 06:41

சட்டி சுட்டதாடா கை விட்டதடா என்ற நிலைமைதான் தமிழக காங்கிரசுக்கு கோஷ்டிக்கு வந்துசேரும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ