உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரஷ்யாவிலிருந்து வர்த்தக வாய்ப்பை சுமந்து வரும் ரயில்

ரஷ்யாவிலிருந்து வர்த்தக வாய்ப்பை சுமந்து வரும் ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மாஸ்கோ பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவுக்கு இரண்டு ரயில்களை அனுப்பியுள்ளது ரஷ்யா. இந்த இரண்டு ரயில்களும், இந்தியாவுக்கு நிலக்கரியை மட்டும் கொண்டு வரவில்லை; ஏராளமான வர்த்தக வாய்ப்புகளையும் சேர்த்தே கொண்டு வருகின்றன.முதல் முறையாக சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் வாயிலாக, ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு ரயில்களில் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. காலம் காலமாக உலக வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் வழித்தடத்துக்கு மாற்றாக, கடந்த 2000ம் ஆண்டு ரஷ்யா, ஈரான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து துவங்கியது தான், ஐ.என்.எஸ்.டி.சி., எனும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம்.

வரப்பிரசாதம்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மும்பை துறைமுகம் வரை, கிட்டத்தட்ட 7,200 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடம், ரயில், சாலை மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை உள்ளடக்கியது. தற்போது முதல் முறையாக, இந்த வழித்தடம் வாயிலாக, இந்தியாவுக்கு இரண்டு ரயில்களில் நிலக்கரியை ரஷ்யா அனுப்பியுள்ளது. உக்ரைன் போரினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக, வழக்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொண்டு வந்த ரஷ்யா தற்போது ஆசிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்பி உள்ளது.மேலும், பொருளாதாரத் தடைகளால், கடல் வழிப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஐ.என்.எஸ்.டி.சி., வழித்தடம் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. எனினும், இந்த வழித்தடம் அவ்வப்போது ஏதேனும் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதால், இதற்கான மாற்று வழித்தடத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக, சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் பயணிப்பது பாதிக்கப்பட்டது.

என்ன நன்மைகள்?

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வழித்தடம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முதலில், சீனாவின் 'பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்' எனும் பி.ஆர்.ஐ., திட்டத்துக்கு மாற்றாக, இந்தியா இந்த வழித்தடத்தை பயன்படுத்த நினைக்கிறது.இந்த வழித்தடம், இந்திய வர்த்தகர்களுக்கு, மத்திய ஆசிய நாடுகள் மட்டுமல்லாமல்; ஈரான், ரஷ்யா, அஜர்பைஜான் மற்றும் பால்டிக் மற்றும் நார்டிக் நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள வழிவகுக்கும். சமீபத்தில், ஈரானின் சாபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகள் கையாள்வதற்கு இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தம், இதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. சூயஸ் கால்வாயை பயன்படுத்தும்போது, இந்தியா - ரஷ்யா இடையேயான சரக்கு போக்குவரத்துக்கான நேரம் 45 நாட்கள்.ஆனால், ஐ.என்.எஸ்.டி.சி., வழித்தடம் இந்த நேரத்தை 25 நாட்களாக, கணிசமாக குறைக்கிறது. மேலும், சரக்கு போக்குவரத்து செலவையும் கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைக்கிறது. உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வருவதால், கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவற்றின் வினியோகம் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. விலையும் உயர்கிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட இப்பொருட்களின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நாடுகள், கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில், இந்த வழித்தடம், அதிக எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளிலிருந்து எளிதாகவும், குறைந்த விலையிலும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வழி வகுக்கிறது. மேலும், மின்சார உற்பத்தி மற்றும் உலோக தயாரிப்புக்கு தேவைப்படும் நிலக்கரியை, மலிவான விலையில் வழங்கும் ரஷ்யாவிலிருந்து, விரைவாக இறக்குமதி செய்ய வகை செய்கிறது.

பயன்பெறும் துறைகள்

இந்த புதிய வழித்தடத்தால் இந்தியாவின் பல துறைகளில் வர்த்தகம் பெருகும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், மருந்து, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், ஜவுளி, விவசாயம், ஆபரணங்கள் போன்ற துறைகளில் வர்த்தகம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Karthikeyan
ஜூன் 30, 2024 08:10

எப்போதும் ரஷ்யாதான் நம்முடைய உற்ற நண்பன்...1972 சீன படையெடுப்பின்போது... அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை தாக்குவதற்கு திட்டமிட்டபோது...உற்ற நண்பனாக நமக்கு உதவி செய்த ரஷ்யாவை நாம் மறக்க முடியாது...இப்போதும் வர்த்தக ரீதியாக நமக்கு உதவி செய்வது ரஷ்யாதான்...மோடி அவர்களால் நமக்கும் ரஷ்யாவுக்குமுள்ள உறவு மிக மிக அதிகமாக மேம்பட்டிருக்கிறது...வாழ்க மோடிஜி...


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 28, 2024 20:20

மோகன்தாஸ் காந்தி, நேரு ஆகியோரின் முன்னோக்கு பார்வை இல்லாமல் பாரதத்தை பிரித்து பல கெடுதல்களை உண்டாக்கிவிட்டார்கள். இல்லையென்றால் வழி நில நிலா மார்க்கமாகவே வரலாம். பாரதத்தை பிரித்து மட்டும் இல்லாமல் ஹிந்துக்களுக்கு எதிரியென்ற மனநிலையில் பாக்கிஸ்தான் முஸ்லிம்களை வைத்துஇருக்கிறார்கள். அவர்களும் கத்தி முனையில் மதம்மாற்றப்பட்ட பயந்தாகொள்ளிகள் என்பத மறந்து ஏதோ மெக்காவில் இருந்து குதித்தது போல் மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.


subramanian
ஜூன் 28, 2024 15:22

நாட்டுக்காக கடுமையாக உழைக்கும் எங்கள் விஸ்வ குரு மோடிக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தையும் மன அமைதியையும், ஆழ்ந்த உள்ளறிவையும், மன திடத்தையும். எதையும் கண்டு கலங்காதா நிலையையும் அருளவேண்டும். ஓம் நாமசிவாயா


Annai Stalin
ஜூன் 28, 2024 14:15

கச்சா எண்ணெய் எவ்வளவு விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை மட்டும் குறைக்க மாட்டார்கள்..... இந்த ஆட்சியில்


Rengarajan
ஜூன் 28, 2024 15:04

கடந்த ஒன்றரை பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமில்லை. விலை இரண்டு முறை குறைக்கப்பட்டிருக்கிது. மாநில அரசு வரி போட்டு விலையேற்றினால் அதற்கு யார் பொறுப்பு.


lana
ஜூன் 28, 2024 14:06

பெரும்பான்மை டுமீல் நாட்டு மக்கள் எனக்கு காசு ருபாய் கிடைக்கும் எனில் எத்தனை பெரிய சமூக குற்றம் குறித்து கவலை கொள்வது இல்லை. இவர்கள் க்கு தேவை உழைக்காமல் காசு பணம் துட்டு


Rengarajan
ஜூன் 28, 2024 08:16

இவ்வளவு திட்டங்களை கொண்டு வந்த பிரதமரை தான் தோற்கடித்தோம்.


Varadarajan Nagarajan
ஜூன் 28, 2024 11:23

இலவச உணவு திட்டத்தை தொடக்கி ஏழை மாணாக்கர்களை பள்ளியின் பக்கம் கொண்டு வந்த கர்மவீரர் காமராஜரையே தோற்கடித்தவர்கள் கழக கண்மணிகள். அவர்களின் அரசியல் கொள்கையின் முன் மற்ற எந்த நல்ல காரியங்களும் எடுபடாது. வாக்காளர்களும் நல்லது கெட்டதுகளை சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்களாக இருப்பது மிகவும் விந்தை


P Karthikeyan
ஜூன் 28, 2024 07:32

இந்த திட்டத்தின் மூலம் வரும் பயன்களை அனுபவிக்க தமிழர்களுக்கு தகுதியில்லை


subramanian
ஜூன் 28, 2024 15:18

கார்த்திகேயன் , சுகன்யா ஸம்ருதி இது போஸ்ட் ஆபீஸ் திட்டம் , இது மோடிஜி கொடுத்த திட்டம். இதை அதிகம் பயன்படுத்துவது தமிழ் நாடு. வீடு கட்டினால் ஒருலட்சம் - அதிகம் பயன் பெற்றது தமிழ் நாடு.


Varadarajan Nagarajan
ஜூன் 28, 2024 07:07

பன்னாட்டு சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை இந்தியா பெற்றுள்ளது. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் முக்கியமான நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் குறைந்த செலவில் கிடைப்பதால் நமது உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். ரஷ்யாவுடன் பன்னாட்டு வர்த்தகம் இந்திய ரூபாயில் நடைபெறுவதால் அந்நிய செலாவணி கணிசமாக மிஞ்சும். இக்கட்டான சூழலில் இந்த சாதனையை படைத்தற்கு நமது பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள். ஆனால் நமது வாக்காளர்கள்தான் இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலவசங்கள் கொடுப்பதாக சொல்லும் வாக்குறுதிகளை நம்புகின்றார்கள் என்பது மிகவும் வேதனை


Pandi Muni
ஜூன் 28, 2024 07:27

சோம்பேறிகளாகிப்போன நம் மக்கள் இலவசங்களுக்காக கை ஏந்தி நிற்கிறார்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ