உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் வசூல்: முறைகேட்டுக்கு குடிநீர் வடிகால் வாரியம் உடந்தை

பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் வசூல்: முறைகேட்டுக்கு குடிநீர் வடிகால் வாரியம் உடந்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: குறிச்சி பகுதியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. எவ்வித ரசீதும் வழங்குவதில்லை. அதனால், முறைகேடாக வசூலிக்கப்படுகிறதா; இத்தொகை வசூலிக்க அதிகாரம் வழங்கியது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 87 முதல், 100வது வார்டு வரையிலான, 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதியில், ரூ.591.34 கோடியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், குழாய் பதித்து, 'சேம்பர்' கட்டி, கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

வீடுதோறும் பண வசூல்

தற்போது குறிச்சி பகுதியில் மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர், இந்திரா நகர், இந்திரா நகர் விரிவாக்கம் - 2 உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது; இது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தொகைக்கு ரசீது தருவதில்லை என்பதால், இவ்வேலையை செய்வது மாநகராட்சியா, குடிநீர் வடிகால் வாரியமா அல்லது ஒப்பந்தம் எடுத்துள்ள, எல் அண்டு டி நிறுவனமா என்கிற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயுடன், வீட்டு இணைப்பு கொடுக்க, ஆறு மீட்டர் துாரத்துக்கு ஒப்பந்த நிறுவனமே இலவசமாக, குழாய் பதிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இச்சூழலில், எக்காரணத்துக்காக, 20 ஆயிரம் ரூபாய் வரை மூன்றாம் நபர்கள் வசூலிக்க அனுமதி தரப்படுகிறது, இதை குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

அனுமதி கொடுத்தோம்!

இதுதொடர்பாக, குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கேட்டதற்கு, 'வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் குழாய் மட்டும், பாதாள சாக்கடையுடன் இலவசமாக இணைத்துக் கொடுக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, துணி துவைப்பது; குளியலறை மற்றும் சமையலறை கழிவு நீரை, பாதாள சாக்கடையுடன் ஏன் இணைக்கவில்லை என கேள்வி கேட்பார்கள். அதனால், தற்போது வேலை செய்யும் ஒப்பந்த நிறுவனத்தினரே, அந்த வேலையையும் சேர்த்துச் செய்ய கூறியுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் விரும்பினால், அதற்குரிய தொகையை ஒப்பந்த நிறுவனத்தினர் வசூலித்துக் கொண்டு, பணியை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, கட்டாயம் இல்லை.குளியலறை, சமையலறை கழிவுகளை இணைக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர் கூறினால், பணம் வசூலிக்க வேண்டாமென, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு கூறியுள்ளோம். சில வீடுகளில் 'இண்டியன்' கழிப்பறை அமைத்திருப்பர்; நமது திட்டத்துக்கு 'வெஸ்டர்ன் டாய்லெட்' அமைத்திருந்தால் மட்டுமே, 'லெவல் மேட்ச்' ஆகும். பழைய கோப்பையை இடித்து விட்டு, புதிதாக பொருத்துவதற்கு செலவாகும். அதற்கான தொகையை கேட்டிருப்பார்கள்' என்றனர்.

அது, வேறொரு டீம்

எல் அண்டு டி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு, ''பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, ஒவ்வொரு வீட்டுக்கும் நோட்டீஸ் வழங்குகிறோம். செப்டிக் டேங்க் இணைப்பு மட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு பணம் வசூலிப்பதில்லை. குளியலறை, சமையலறை கழிவு இணைப்புகள் வழங்கும் பணியை, வேறொரு குழுவினர் செய்து வருகின்றனர்' என்றனர்.இப்படி, ஆளாளுக்கு மறுக்கின்றனர்; அல்லது காரணம் சொல்கின்றனர். எதுவாக இருந்தாலும் தேவையற்ற பணவசூல் கூடாது என்பதே, பொதுமக்களின் வேண்டுகோள். சில வீடுகளில் 'இண்டியன்' கழிப்பறை அமைத்திருப்பர்; நமது திட்டத்துக்கு 'வெஸ்டர்ன் டாய்லெட்' அமைத்திருந்தால் மட்டுமே, 'லெவல் மேட்ச்' ஆகும். பழைய கோப்பையை இடித்து விட்டு, புதிதாக பொருத்துவதற்கு செலவாகும்.

வசூல் குறித்து விசாரிக்கிறேன்'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''குறிச்சி பகுதியில், 8,000 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும்; இதுவரை, 4,000 இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளன. ஏன் இணைப்பு கொடுக்கவில்லை என கேட்டால், யாரும் சரியாக பதிலளிப்பதில்லை. ஆறு மீட்டர் வரை, இலவசமாக இணைப்பு வழங்க வேண்டும். குளியலறை, சமையலறை கழிவு நீரை, பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கக் கூடாது; ஏன் இணைக்கிறார்கள் என விசாரிக்கிறேன். ரூ.20 ஆயிரம் வரை வசூலிப்பது ஏன் என விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kavi
மே 29, 2024 07:05

Thiruthu uruthu model


jayvee
மே 28, 2024 19:17

இது ஒன்றும் புதிதல்ல .. தமிழக அரசு ஊழியர்களின் இன்னொரு கொள்ளை இது.. பம்மல் பகுதியில் இருபது வருடங்களுக்கு முன்பே இருபதாயிரம் லஞ்சம் வாங்கிய கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள்..


Suresh sridharan
மே 28, 2024 17:39

முடிந்தால் இந்த பாதாள சாக்கடை திட்ட பைப் ஜாயிண்ட் கொஞ்சம் பாருங்க ஏதோ ஒரு பைப்பை பைப்பு பேஸ்ட் பண்ணி இருக்காங்களா பேக்கிங் பண்ணி இருக்காங்களா என்று தான் ஒரு பைப்பும் ஜாயிண்ட் இல்லை தண்ணீர் முழுவதும் பாதாள சாக்கடை வழியாக செல்வதில்லை நேர்மாறாக பாதாளத்துக்கே செல்கிறது இதை நான் சொல்லவில்லை நீங்களே சென்றால் பார்க்கலாம் ஏனென்றால் ஒரு நாள் இப்படியே சென்று சென்று ஒரு நாள் ரோட்டில் செல்லும் வண்டிகள் அனைத்தும் பாதாளத்திற்கு செல்லலாம் அதற்கான வழியை இப்பொழுதே தயார் செய்து விட்டனர் செய்தவர்களுக்கு நன்றி எப்படியும் பாதாளத்தை ஒரு நாள் சந்திக்க உள்ளனர்??


Rangarajan
மே 28, 2024 16:24

உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே அரசின் திட்டங்கள் வேலை நடக்க கையூட்டு பெறப்படுகிறது. பழியை வேறு ஒருவர் மேல் சாமர்த்தியமாக போடுவது.


Ponraj Pethanan
மே 29, 2024 15:14

யாதும் ஊரே யாவரும் கேளிர் . எல்லா அரசியல் கட்சியும் இப்படிதான் .


அசோகன்
மே 28, 2024 14:33

கொள்ளை அடிக்க காசு பத்தலைனா யாரு கொடுப்பா..... மக்கள்தான் கொடுக்கணும் ???


Barakat Ali
மே 28, 2024 10:52

இதுக்குப்பேருதானுங்கோ திராவிடியால்ஸ் வழங்கும் விடியல் .....


மேலும் செய்திகள்











புதிய வீடியோ