மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
2 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
4 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
4 hour(s) ago | 1
வார்டு மறுவரையறை அடிப்படையில் ஆவணங்கள் மற்றும் 'ஆன்லைன்' சேவையில் மாற்றம் செய்யாததால், குடிநீர் வினியோகம், கழிவுநீர் பிரச்னைகள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் தாமதம், குழாய் உடைப்பு, கழிவுநீர் அடைப்பு குறித்து வார்டு இளநிலை பொறியாளர், மண்டல பகுதி பொறியாளர், தலைமை அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் வகையில், தனித்தனி மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. தவிர 044 -- 4567 4567 என்ற எண்ணிலும், கட்டணமில்லாமல், '1916' எண், www.chennaimetrowater.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். எக்ஸ், பேஸ்புக் சமூகவலைதளங்கள் மற்றும் இ -- மெயில்' வாயிலாகவும் புகார்கள் பதிவு செய்ய முடியும். முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கும் புகார்கள், அந்தந்த வார்டு இளநிலை பொறியாளர்கள் கவனத்திற்கு அனுப்பப்படும். புகார் தெரிவிப்பவரின் மண்டலம் எண், வார்டு எண், தெரு பெயர், கதவு எண் உள்ளிட்டவை அடங்கிய முகவரியின் அடிப்படையில், அதிகாரிகள் கள ஆய்வு, ஆவணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.சென்னை மாநகராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. பெரிய வார்டுகளில் இருந்து, 10 முதல் 25 சதவீதம் தெருக்கள், அருகிலிருந்த வார்டில் சேர்க்கப்பட்டன. இதன் அடிப்படையில், 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கவுன்சிலர்கள் தலைமையிலான நிர்வாகம் துவங்கி, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், குடிநீர் வாரியத்தில் வார்டு மறுவரையறை அடிப்படையில் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பணி முழுமை பெறவில்லை. ஒவ்வொரு வார்டிலும், சில தெருக்களை அருகிலுள்ள வார்டில் சேர்த்த நிலையில், அதுகுறித்த விபரத்தை குடிநீர் வாரிய ஆவணங்களில் சேர்க்கவில்லை. இதனால், வரையறை வார்டு அடிப்படையில் தெரிவிக்கும் புகார்கள், புதிய வார்டு அதிகாரிக்கு செல்லாமல், பழைய வார்டு எண்ணுடைய அதிகாரிக்கு செல்வதால், நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் வரி, கட்டணம் செலுத்துவது, முகவரி மாற்றம், புதிய இணைப்பு பெறுதல் போன்ற பணிகளிலும் சிக்கல் ஏற்படுகிறது.சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர், கடந்த 2022ம் ஆண்டு, செப்டம்பரில், 'வார்டு மறுவரையறை அடிப்படையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். அதன் பின், இரு ஆண்டுகள் கடந்தும் நிலைமை மாறவில்லை. மொத்தமுள்ள 200 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விபரங்கள் அடிப்படையில், வாரிய இணைய ஆவணங்களில் மாற்றப்பட வேண்டும். இந்த பணியை, குடிநீர் வாரிய தொழில்நுட்ப பிரிவு செய்ய வேண்டும். ஆனால், நிர்வாக குளறுபடியால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றனர். மேலாண்மை இயக்குனர் மீண்டும் தலையிட்டு, வார்டு மறுவரையறை அடிப்படையில், குடிநீர் வாரிய பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலத்தில், வார்டு எண்கள் முழுதும் மாற்றப்பட்டன. அது குறித்த தகவலும், வார்டு மக்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை. புதிய வார்டு எண் அடிப்படையில் புகார் தெரிவித்தால், அது வேறு மண்டலம் அல்லது வார்டு மாறி அதிகாரிகளுக்கு செல்கிறது. இதனாலும், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
குடிநீர், கழிவுநீர், வரி, கட்டணம் தொடர்பான புகார்களை, 'ஆன்லைன்' வழியாக தெரிவிக்க, 11 இலக்கம் கொண்ட வரி மதிப்பீடு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதில், வார்டு மறுவரையறை செய்த எண் அடிப்படையில் புகார் தெரிவித்தால், பழைய வார்டு அதிகாரிக்கு புகார் செல்கிறது. அவர், தன்னுடைய வார்டில் குறிப்பிட்ட தெரு இல்லை என, திருப்பி அனுப்புகிறார். இதனால், நடவடிக்கையில் காலதாமதம் ஏற்படுகிறது. வார்டு வரையறை அடிப்படையில், ஆன்லைன் சேவையை மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பொதுமக்கள்
'ஆன்லைன்' மென்பொருளில், மறுவரையறை அடிப்படையில் வார்டுகளை பிரித்து பதிவேற்றம் செய்யாததால், பொதுமக்களின் புகார்கள் வார்டு மாறி செல்கின்றன. இது குறித்து, உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். எதனால், பிரச்னையை சரி செய்யவில்லை என, எங்களுக்கு தெரியவில்லை. இதனால், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, எங்களால் பதில் கூற முடியவில்லை.- குடிநீர் வாரிய அதிகாரிகள்
வார்டு மறுவரையறை அடிப்படையில், வார்டு தெரு பெயர் பலகைகளில் எண்களை மாற்றவில்லை. இதனால் வரி, கட்டட அனுமதி, புகார் தெரிவிப்பதில் மக்கள் குழப்பம் அடைகின்றனர். வார்டு எண் முறையாக குறிப்பிடவில்லை என மனுக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.இந்த பிரச்னை, பொறியாளர்கள் புதிதாக பணிக்கு சேரும் போது அதிகமாக நடக்கிறது. அனைத்து சேவைகளும் ஆன்லைன் வழி என்பதால், அதை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.- -நமது நிருபர் --
2 hour(s) ago
4 hour(s) ago | 2
4 hour(s) ago | 1