உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எதிர்ப்பு பின்னணியில் தி.மு.க.,

எதிர்ப்பு பின்னணியில் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில், தமிழகத்திலிருந்து அனைத்து ஆதீன தலைவர்களையும் அழைத்து, செங்கோலை லோக்சபாவில் நிறுவினார், பிரதமர் மோடி; வழக்கம் போல இதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர்.தற்போது துவங்கிய பார்லிமென்ட் புதிய கூட்டத்தொடரிலும், செங்கோல் விவகாரம் தொடர்கிறது. 'செங்கோலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்' என, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி., - ஆர்.கே.சவுத்ரி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்; ஆனால், இதை ஏற்க மறுத்து விட்டார், சபாநாயகர் ஓம் பிர்லா. 'இந்தக் கடிதத்தை எழுத துாண்டியது தி.மு.க., - எம்.பி., ஒருவர் தான்' என, பார்லிமென்ட் மத்திய வளாகத்தில் பேச்சு அடிபடுகிறது. 'செங்கோலை எதிர்த்தவர்களுக்கு ஆப்பு வைக்க பிரதமர் தயாராகி விட்டார்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, அடுத்த வாரம் பிரதமர் மோடி பார்லிமென்டில் பேச இருக்கிறார்; அப்போது செங்கோலை எதிர்த்தவர்களை ஒரு பிடி பிடிக்க இருக்கிறாராம். 'செங்கோலுக்கு எதிராக யார் இருந்தாலும், அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். தமிழக கலாசாரத்திற்கு மதிப்பளித்து, பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. 'ஏன் இதை வடமாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்க்கின்றனர்? தமிழக கலாசாரத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?' என, பல கேள்விகள் கேட்க உள்ளாராம் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
ஜூன் 30, 2024 19:51

செங்கோலின் நந்திக்கு பதில் சிலுவை பிறை சின்னம் வைத்தால்தான் திருட்டு திராவிட காங்கிரஸ் கும்பல் ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கும் போல..


kantharvan
ஜூலை 01, 2024 23:18

திருடனுக்கு இப்போதுதான் தேழ் கொட்டி இருக்கிறது ...பாவம் கத்த கூட முடியாது...இதுல எங்க ஒரு பிடி புடிக்கிறது.


Ramamurthy N
ஜூன் 30, 2024 12:21

பாரதம் என்றாலே சனாதன நாடு, இந்தியா முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். வெளிநாட்டு பழக்கவழக்கங்கள் நமது பாரதநாட்டிற்கு தேவையில்லை. இந்தியா வரும் வெளிநாட்டவர்க்கு பழரசங்களை வழங்கலாம்.


venugopal s
ஜூன் 30, 2024 12:15

பாஜக எந்த விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து அரசியல் செய்து ஆதாயம் தேடுவதில் விற்பன்னர்கள்!


xyzabc
ஜூன் 30, 2024 13:21

useless comment.


N Sasikumar Yadhav
ஜூன் 30, 2024 19:12

பாஜகவினர் சாப்பாட்டை சாப்பிட சொல்கிறார்கள் ஆனால் பாஜகமீது இருக்கிற கடுப்பில் சாப்பாடு சாப்பிடாமல் வேறுதான் பிடிக்கும் என உங்க புள்ளிராஜா கூட்டணி களவானிங்க சொல்கிறார்கள்


s sambath kumar
ஜூலை 01, 2024 13:56

பிஜேபி தவிர பிற கட்சிகள் யோக்கிய சிகாமணிகள் அப்படித்தானே?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 30, 2024 12:12

தமிழ்நாட்டில் உள்ள எல்லா மேயர்களும் செங்கோல் வைத்திருக்கிறார்களே , எதற்கு கோப்பால் ?


Vijayakumar Srinivasan
ஜூலை 01, 2024 20:16

நாம் எப்பவுமே.ஊருக்குஉபதேசம்.தான்.செய்வோம்


NAGARAJAN
ஜூன் 30, 2024 12:03

நமது பாரத பிரதமர் அடுத்த நாடகத்துக்கு தயாராகி விட்டார் என்று புரிகிறது. .


..
ஜூன் 30, 2024 17:55

முள்ளை முள்ளால் எடுப்பதுதான் ராஜதந்திரம்


K V Ramadoss
ஜூன் 30, 2024 11:18

உருப்படியான கருத்துக்கள் சொல்லவோ காரியங்கள் செய்யவோ துப்பில்லாதவர்கள் இந்தமாதிரி பேத்துவார்கள். ஏன் அசோகஸ்தூபியை தென்னாட்டவர்கள் எதிர்க்கலாமே ?


அசோகன்
ஜூன் 30, 2024 10:58

சபாநாயகர் அருகே செங்கோல் வேண்டாம் TR பாலு மது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு full பாட்டிலை வைக்கவேண்டும்..... அதுவே சமூக நீதி


தமிழ்வேள்
ஜூன் 30, 2024 10:53

போதைக்கடத்தல் தொடர்பான இன்டர் போல் வழக்கு விரைவுபடுத்த பட்டு கைதுகள் தொடர்வது திராவிடத்தை ஒடுக்கும்..அதை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 08:27

இப்ப எதுக்கு அமெரிக்கா போற? முதலீட்டை ஈஈஈஈர்க்க ... ஒவ்வொரு தடவை வெளிநாடு போகும்போதும் இதைத்தான் சொல்லிட்டு போற ... ஒரு தயிரும் கொண்டாரலயே ....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 08:19

செங்கோலை மன்னர் ஆட்சியின் அடையாளமாக மட்டுமே பார்ப்பது பாமரர்களின் போக்கு.. நீதி வழுவாத அரசு என்பதன் அடையாளமே செங்கோல்... அது தமிழகக் கலாச்சாரம் சார்ந்தது...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை