உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! அம்பானி மீது ஏன் கோபம்?

டில்லி உஷ்ஷ்ஷ்...! அம்பானி மீது ஏன் கோபம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில், பிரபல தொழிபதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணம், மும்பையில் படுவிமரிசையாக நடைபெற்றது. உலக வி.வி.ஐ.பி.,க்கள் பலர் திருமணத்தில் பங்கேற்றனர். பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்கள், இதில் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jslk0e50&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராகுல், சோனியாவிற்கு நேரடியாக சென்று பத்திரிகை கொடுத்திருந்தார், முகேஷ் அம்பானி; ஆனால், அவர்கள் யாரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில், ஏதோ இரு இடத்தில் மக்களுடன் பீட்சா சாப்பிட்டு, அதை சமூக வலைதளத்தில், அம்பானி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றோரை கிண்டலடிக்கும் வகையில் ராகுல் பதிவிட்டிருந்தார்.திருமணத்தில் பங்கேற்ற பல, 'இண்டியா' கூட்டணி தலைவர்களுக்கு இது பிடிக்கவில்லை. பீஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 28 பேருடன் திருமணத்தில் பங்கேற்றாராம்; மேலும், இதற்கான சிறப்பு விமானத்தை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்தாராம். அத்துடன், திருமணத்தில் பங்கேற்க வசதியாக, 15 கார்களும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுஇருந்ததாம்.திருமண விழாவில் லாலுவிடம், 'ராகுலுக்கு என் மீது என்ன கோபம்?' என, கேட்டாராம் முகேஷ் அம்பானி. அதற்கு, 'ஹரே பாய், அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்' என்றாராம் லாலு. இது தான் தற்போது டில்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganesun Iyer
ஜூலை 21, 2024 18:22

மைன்ட் வாய்ஸ் சூப்பர்...


Lakshminarasimhan
ஜூலை 21, 2024 16:11

அது வேற ஒன்னும் இல்லேங்கோ அவங்களுக்கு கொஞ்சம் கூச்சம்


Sridhar
ஜூலை 21, 2024 13:21

கல்யாணத்திற்கு மோடியும் வருவாரென்று தெரியும், அப்போது அவுருக்குத்தான் முக்கியத்துவம் மற்ற எல்லோரும் ஒதுங்கி நிற்கவேண்டும். பார்லிமென்ட்டாக இருந்தால் கூச்சல் குழப்பம் செய்யலாம், கல்யாணத்தில் அந்த மாதிரி செய்யமுடியாது. மோடிக்கு முன்னால் அவ்வாறு ஒதுங்கி நின்றால் 99 சீட் வெற்றிக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும். அதனால் போகவில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 10:26

அது ஹரே பாய் இல்லீங்கோ ...... அரே பாய் ......


Barakat Ali
ஜூலை 21, 2024 09:40

நம்பிட்டோம் .......


Easwar Kamal
ஜூலை 21, 2024 07:48

இவனுகளே குழந்தை தொட்டிலில் ஆட்டுவானுகலாம் பிறகு இவனுகளே குழந்தை கிள்ளி விடுவானுங்கலம். மோடி இப்படி கீலே போனதுக்கு இந்த அம்பானியும் ஒரு காரணம். எங்கே அந்த அதானி ?


RAAJ68
ஜூலை 21, 2024 07:38

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமான வரி கணக்கு சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு எடுக்கப்பட்டிருந்ததாக யாரோ ஒருவர் கூறியிருந்தார். அப்படியானால் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் அவ்வளவு வருமானம் ஈட்டுபவர்களாக இருக்க வேண்டும். பன்னீர்செல்வம் சென்றிருந்தார் ஆனால் பழனிச்சாமி கமல்ஹாசன் போன்ற ஏழைகள் கலந்து கொள்ளவில்லை.


VENKATASUBRAMANIAN
ஜூலை 21, 2024 08:39

உதயா சென்றாரே


RAAJ68
ஜூலை 21, 2024 07:35

STALIN கலந்து கொண்டு இரண்டு கோடி ரூபாய் பரிசு பொருளை பெற்றுக் கொண்டாரா இல்லையா. மணமக்களுக்கு அவர் எவ்வளவு கோடி ரூபாயில் பரிசுப் பொருள் கொடுத்தார் என்பதையும் தயவு செய்து விளக்கவும்.


Rajappa
ஜூலை 21, 2024 06:36

அதெல்லாம் சொல்றதுகில்ல ?? பைத்தியம் எப்போ எப்படி நடந்து கொள்ளும் ன்னு அவன் கட்சிகாரனுக்கே தெரியாது...லல்லு மைண்ட் வாய்ஸ் ????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை