உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் கலக்கம்

தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் கலக்கம்

தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் பா.ஜ., மூன்று தொகுதிகளையும், அ.தி.மு.க., எட்டு தொகுதிகளையும் கைப்பற்றும் என்று வெளியான தகவல், தி.மு.க.,வில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பதவிகள் பறிக்கப்படலாம் என்பதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை முழுக்க, முழுக்க, தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனம் வாயிலாகவே நடந்தது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, கட்சி நிர்வாகிகளைவிட, இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

பதவி பறிக்கப்படும்

'கடந்த 2019 லோக்சபா தேர்தலைவிட கூடுதலான ஓட்டு சதவீதத்தில் வெற்றி பெற வேண்டும். நாடும் நமதே; 40ம் நமதே. ஓட்டு கள் குறைந்து தோல்வி அடைந்தால் சர்வாதிகாரியாக மாறி, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பதவி பறிக்கப்படும்' என, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் பல முறை எச்சரித்தார். அதேபோல், அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, '5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்' என சுட்டிக்காட்டினார்.இருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி போன்ற தொகுதிகளில், பா.ஜ., மலரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு இல்லை

அ.தி.மு.க.,வுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர் போன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.இப்படி தனியார், 'டிவி' சேனல்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக் கணிப்பில், தி.மு.க., குறைந்தபட்சம், 29 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக, 37 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தி.மு.க.,வுக்கு, 40க்கு 40 என்ற, 100 சதவீத வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என, கருத்துக் கணிப்புகள் பிரதிபலித்திருப்பது, தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி அடையும் தொகுதிகளை சேர்ந்த மாவட்டச் செயலர்கள், பொறுப்பு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்பதால், அவர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

அடுத்தது என்ன?: ஆலோசித்த பழனிசாமி

தி.மு.க.,வில் மா.செ.,க்கள் மற்றும் அமைச்சர்களை தேர்தல் பணிக்கு விரட்டி பணியாற்ற வைத்தது போல, அ.தி.மு.க.,விலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்தலுக்கு முன் ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விரட்டினார், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 25 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்; இல்லையேல் பதவியை பறிக்கத் தயங்க மாட்டேன் என கூறி, நிர்வாகிகளை அதிர வைத்தார் பழனிசாமி. இதனால், துவக்கத்தில் தேர்தல் பணியில் இருந்த அ.தி.மு.க., - மா.செ.,க்களும், மாவட்ட, மாநில நிர்வாகிகளும் களம் இறங்கி வேகமாக பணியாற்றினர். ஆனால், தேர்தல் கருத்துக்கணிப்புகள் அந்தளவுக்கு அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லாததால், கட்சியினர் மீது பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். பெரிய அளவில் வெற்றி கிடைக்காத சூழலில், அடுத்தடுத்து எப்படி செயல்படுவது என்பது குறித்து, நேற்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரோடு பழனிசாமி ஆலோசித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

saravan
ஜூன் 03, 2024 19:10

எடப்பாடியின் தவறான முடிவிற்கு பொறுப்பேற்று தலைமையை ஓ பி எஸ் இடம் கொடுத்துவிட்டு சந்நியாசம் போகலாம்


A1Suresh
ஜூன் 03, 2024 19:05

தமிழகத்தை கொங்குநாடு, பாண்டியநாடு என்று யூனியன் பிரதேசங்களாக பிரித்துவிட வேண்டும். அப்படியே பஞ்சாப்பும். எல்லை மாநிலங்களால் என்றுமே தொல்லை


krishna
ஜூன் 03, 2024 15:52

YAARUM KAVALAI PADA VENDAAM.


CHELLAKRISHNAN S
ஜூன் 03, 2024 13:20

what about trichi


ديفيد رافائيل
ஜூன் 03, 2024 12:48

தேர்தல் கருத்து திணிப்புக்கே இப்படியா?


vijay
ஜூன் 03, 2024 20:03

ஸ்டிக்கர் ஒட்டி ஊரை ஏமாற்றி, பொய்களாக சொல்லி வோட்டு வாங்கி விடியல் இல்லாமல் செய்ததை விட இது என்ன பிரமாதம்?


Balasubramanian
ஜூன் 03, 2024 12:04

கோவை, உதகை, சிதம்பரம், தென் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி இவை மற்றும் சில பாஜக மலரும்! நாளை சந்திப்போம்


Rajasekar Jayaraman
ஜூன் 03, 2024 09:00

தலைமையே தீகரா, புழலா தெரியல இதுல.... காமெடி பண்ணிக்கிட்டு.


ராமகிருஷ்ணன்
ஜூன் 03, 2024 07:39

வெறும் கலக்கம் மட்டுமா. திமுக எத்தனை துண்டுகளாக சிதறும். ஆவலாக காத்திருக்கிறோம்.


தமிழ்வேள்
ஜூன் 03, 2024 11:36

தமிழகம், இரண்டாக, சென்னை தனி யூனியன் பகுதியாக பிரிக்கப்பட்டால், திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களும் துண்டு துண்டாக சிதறி காணாமல் போகும்.. சாதி, சிறுபான்மை மதவாதம், பிரிவினை வாதம், கள்ளநோட்டு, சாராயம், தற்போது போதை கடத்தல், இவை மட்டுமே இன்றைய திராவிடம் ....இவை தவிர வேறொன்றும் இல்லை ..


மேலும் செய்திகள்