உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணி பற்றி பேச தமிழக காங்கிரசுக்கு தடை

தி.மு.க., கூட்டணி பற்றி பேச தமிழக காங்கிரசுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில், 'தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்' என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மறைமுகமாக தி.மு.க., கூட்டணியை விமர்சித்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை தொடர்பு கொண்டு, 'தமிழகத்தில் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் பேசுகின்றனர். அவர்களின் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் விவாதமாகி, அதிருப்தி அடைய வைக்கிறது. கூட்டணி விவகாரம் பற்றி பேச பேச வேண்டாம் என, அவர்களிடம் நீங்கள் வலியுறுத்துங்கள்' என கேட்டுக் கொண்டார்.மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரிடமும், தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் நடந்த விவரங்களை டில்லி மேலிடம் கேட்டுள்ளது. கூட்டணி குறித்த பேசியபோது தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லது கண்டித்திருக்கலாம் என, அவரிடம் மேலிடம் கடிந்து கொண்டதாக தெரிகிறது.இதையடுத்து 'கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவு செய்யும். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பேசக் கூடாது' என, ராகுல் எச்சரித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தனித்து போட்டியிடுவது தொடர்பாக, மாநில தலைமையால் முடிவு செய்ய முடியாது; அந்த வரலாறும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும், காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் கூட்டணி பற்றி பேசுவதற்கு அதிகாரம் இல்லை.இவ்வாறு கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Pattabiraman Vengeteraman
ஜூன் 16, 2024 15:41

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்.


ayen
ஜூன் 15, 2024 19:07

கேவலம் தமிழக காங்கிரஸின் நிலமை. மாநில உரிமை, மாநில சுதந்திரம் பற்றி பேசும் தி.மு.க அவர்களின் கூட்டனி கட்சியான காங்கிரஸ் சுதந்திரமாக செயல்படுவதை பொருத்துக்கொள்ள முடியாமல் கட்சியின் மேலிடம் மூலியமாக தமிழக காங்கிரஸின் வளர்ச்சிக்கு தடை போட்டுள்ளது


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 14:54

காமராசர் ஆட்சியை அமைத்து விட்டார்களே.


Sridhar
ஜூன் 15, 2024 14:30

கட்சிய வளர்க்கணும்ங்கற ஆசை எங்க இருக்கும்? எதோ ரெண்டு மூணு இடத்துல ஜெயிச்சோமா, அதுமூலமா ஆட்சிய பிடிச்சு நம்மளும் சம்பாதிச்சு கூட இருக்கறவங்களுக்கு அதுல கொஞ்சம் பங்குன்னு கொடுத்தோமாங்கற நினைப்புல இருக்குறவங்க,


அ.சகாயராசு
ஜூன் 15, 2024 12:55

கட்சி நிலை என்ன என்று தெரியாமல் தனது அதிகாரத்தை காண்பித்து பின் அவமானப்படுவது தான் வழக்கமாக உள்ளது


ராமகிருஷ்ணன்
ஜூன் 15, 2024 11:20

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்று ஒன்னும் கிழிக்க முடியாது. அப்படி நின்று விட்டாலும் காங்கிரஸின் ஓட்டு நிலவரம் என்ன என்று தெரிந்து விடும். மானம் போயிடும். திமுக இப்ப கொடுக்கிற சீட்கள் தராது. இப்படியே இருப்பது உங்களுக்கு பாதுகாப்பு.


SABA PATHY (LIC SABA)
ஜூன் 15, 2024 10:43

... அதற்குள் எதுக்கு இந்த பில்டப்


Saai Sundharamurthy AVK
ஜூன் 15, 2024 09:15

டெல்லி காங்கிரஸ் மேலிடம் தமிழனை ஜாதி ரீதியில் அவமானப்படுத்தி விட்டது.....! கடுமையாக கண்டிக்கின்றோம்...!


hariharan
ஜூன் 15, 2024 08:57

இதுவே உண்மையான ஜனநாயகம். மத்திய அரசு, ஊடகங்களின் மீது அடக்குமுறை செய்கிறது காங்கிரஸின் உண்மையான நிலைப்பாடு.


ramani
ஜூன் 15, 2024 06:32

பிச்சை எடுப்பது என்று முடிவு செய்ய பட்டது. இதுல தனி ஆவர்த்தனம் எதுக்கு? பிச்சை பாத்திரத்தில் ஒன்றும் விழாமல் போய்விடபோகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை