உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜி.பி.எஸ்., முறையில் உட்பிரிவு பட்டா முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் அமல்

ஜி.பி.எஸ்., முறையில் உட்பிரிவு பட்டா முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம், விரைவில் அறிமுகமாக உள்ளது. பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர், 'சர்வேயர்' வாயிலாக முன்கூட்டியே அளந்து, உட்பிரிவு செய்ய வேண்டும்.

தானியங்கி முறை

இதன் அடிப்படையில் பத்திரப்பதிவு முடிந்ததும், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் மேற் கொள்ளப்படும். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் நிலையில், பல்வேறு தலையீடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால், புதிதாக வழங்கப்படும் பட்டாவில், சொத்து குறித்த விபரங்களை துல்லியமாக குறிப்பிட, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி, சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாகங்களை நில அளவையாளர் அளந்து, அதன் நான்கு எல்லைகளையும் அடையாளப்படுத்துவார்.அதன்பின், 'மேனுவல்' முறையில் நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும். இதில், அந்தஉட்பிரிவின் நான்கு பக்கத்திலும் உள்ள சர்வே எண்கள் அல்லது உட்பிரிவுகள் விபரம் மட்டும் குறிப்பிடப்படும்.

புவிசார் தகவல்கள்

இந்த நடைமுறையை, மொத்தமாக மின்னணுமயமாக்கும் வகையில், அந்த நிலத்தின் ஜி.பி.எஸ்., எனப்படும், புவிசார் தகவல்கள் சேர்க்கப்படும். அத்துடன், அட்சரேகை, தீர்க்க ரேகையில் இருந்து அந்த நிலம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற விபரங்கள், 'டிஜிட்டல்' முறையில் சேர்க்கப்படும். மேலும், எப்போது அங்கு நில அளவை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களும் சேர்க்கப்படும். முதல் கட்டமாக, விருதுநகர், நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.உட்பிரிவு பட்டா மட்டுமல்லாது, புதிய பட்டா வழங்குவதிலும், ஜி.பி.எஸ்., முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, உட்பிரிவு பட்டா கையில் இருந்தால் போதும்; அதில் சம்பந்தப்பட்ட நிலம் எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களை, பொது மக்கள் கணினி வாயிலாக எளிதில் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

CHARLES
ஜூலை 18, 2024 12:43

திட்டம் நல்லது ஆனால் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது


Narayanasamy
ஜூலை 17, 2024 22:26

நல்ல திட்டம். அலுவலர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். காலவரையறை செய்ய வேண்டும். எந்த காரணமும் சொல்லாமல் ரோஜெக்ட்ட்அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர்.காரணம் சொல்ல வேண்டாமா.


Baladhandayutham Eswari
ஜூலை 17, 2024 09:26

அரசின் திட்டங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது ஆனால் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை பட்டா வழங்குவது சம்பந்தமான வேலைகளில் ஆர்வம் காட்டுவது இல்லை நில உரிமையாளர்களிடம் பணம் பறிப்பது ஒன்றே முக்கிய குறிக்கோள் அதுவும் 500, ஆயிரம் இதோடு முடிவதில்லை குறைந்தது 15 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் அம்பதாயிரம் என்று முடிவடைகிறது ஏதோ ஒன்றும் இல்லாத காரணத்துக்காக பட்டா வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன இதுதான் நடைமுறை


ktm
ஜூலை 17, 2024 08:05

ஐயா வணக்கம் நல்ல செய்தி அரசு பொது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து உள்ளது அந்தத் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்றடைய அதிகாரிகளை தடை போடுகிறார்கள் ஆகையால் பொதுமக்களுக்கு இதுபோல் நல்ல திட்டங்கள் சென்று அடைவது இல்லை ஆகையால் பொதுமக்களுக்கு கிராமம் வாரியாக ஆட்டோகள் மூலம் மைக்கின் வழியாக பொது மக்களுக்கு பட்டாமாறுதல் சம்மந்தம்மாக யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம் இசேவையின் மூலம் மனு அனுப்பிய பிறகு வீட்டுக்கு சென்று விட வேண்டும் எந்த அதிகாரியேயும் நேரில் சென்று பார்க்க வேண்டாம் என்பதை தெளிவாக பொதுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும்


DORAI RAJ
ஜூலை 16, 2024 23:20

அருமையான கருத்துக்கள்.


DORAI RAJ
ஜூலை 16, 2024 23:19

வரவேற்க தக்க தகவல்கள்


Ashanmugam
ஜூலை 16, 2024 16:30

தமிழக அரசு பட்டா சம்பந்தமாக என்னென்ன மாறுதல்கள் வரையிலான பட்டா சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும், ஆன் லைனில் விண்ணப்பிக்கும் போது, கர்சர் உட்பிரிவு காலம் வரும்போது நகராது. பிறகு பட்டா காப்பியும் பதிவிறக்கம் அரசு சொல்லும் அளவில் ஏற்றுமதி செய்யமுடியாது. இதை எல்லாம் தாண்டி முடிவில் தாசில்தாரை பார்த்து லஞ்சம் தராமல் பட்டா மக்கள் கைக்கு வராது அந்த அளவிற்கு தமிழக அரசின் நெட் ஒர்க் மிகவும் ஓர் மோசமான நெட் ஒர்க் செயலி.


Sankar Ramu
ஜூலை 17, 2024 01:15

திராவிட மாடல். வாயால் மட்டுமே வடை சுடப்படும்.


N DHANDAPANI
ஜூலை 16, 2024 14:47

விவசாய நிலங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பாக பார்த்தோம் என்றால் இது மிக அருமையான வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் விவசாயிகள் நிலங்களை வாங்குவதற்கு முன்பே முன்பணம் கொடுத்த காலகட்டத்தில் இது மாதிரியான உட்பிரிவுக்கு ஏற்பாடு செய்து விட்டால் கிரைய பத்திரம் எழுதும் பொழுது அடுத்தது பட்டா மாற்றும் பொழுது மிக எளிதில் வேலை முடிந்து விடும் அரசுக்கு மிக்க நன்றிகள் தமிழக விவசாயிகள் சங்கம் பதிவு பெற்றது


Balachandran Bala
ஜூலை 16, 2024 08:29

இது நல்ல முயற்சி. நமது நிலத்தின் எல்லைகைளக் கண்டறிய கற்கள் போடத் தேவையில்லை. மொபைல் போன் ஜிபிஎஸ் குறியீடுகள் மூலம் நமது நிலத்தின் எல்லையை துல்லியமாக எப்போது வேண்டுமானாலும் அடையலாம். அவரவர் நிலத்திற்கு தனித்தனி குறியீடுகள் இருக்கும் என்பதால் சச்சரவுகள் இருக்காது. சர்வேயர் நிலத்திற்கு வந்து அளவை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


Arul Narayanan
ஜூலை 16, 2024 08:18

இந்த கூடுதல் வேலைகளுக்காக கூடுதலாக தான் அழ வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ