உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கடன் சுமையில் தவிக்கும் இந்தியர்கள்

கடன் சுமையில் தவிக்கும் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியர்களில் பெரும்பாலானோர் கடன் சுமை கொண்டிருப்பதும், 60 வயதிற்கு மேலான பலரும் கடனுக்கான மாதத் தவணை செலுத்திக் கொண்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியர்களின் நிதி ஆரோக்கியம் குறித்து அறிவதற்காக, பின்னவேட் எனும் நிதிச் சேவை நிறுவனம், 1,727 பேரிடம் இலக்கு நிர்வாகம், பட்ஜெட் வகுப்பது, வரி திட்டமிடல், முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 38 சதவீதம் பேர் மட்டுமே கடன் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 60 வயதிற்கு மேலானவர்களில் 31 சதவீதம் பேர், கடனுக்கான தவணை செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.மேலும், எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க கைகொடுக்கும் அவசரகால நிதி இருப்பதாக, 40 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். கவலை அளிக்கும் வகையில், 70 சதவீதம் பேருக்கு மேல் போதுமான காப்பீடு பெற்றிருக்கவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நிகர மதிப்பு கொண்டவர்களில் பெரும்பாலானோர் தெளிவான நிதி இலக்குகளை கொண்டிருப்பதோடு, தங்கள் நிகர மதிப்பையும் நன்கு அறிந்துள்ளனர். எனினும் கணிசமானோர் ஓய்வுகால திட்டமிடலில் ஈடுபடவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kanns
ஆக 03, 2024 10:52

But False Propaganda Agents of Power-Misusing RulingParty Govts Stooge Officialdoms Never Accepts Truth SHAME


அசோகன்
ஜூலை 29, 2024 17:01

எதெற்கேடுத்தாலும் அரசை குறை சொல்வது தவற பழக்கம்...... இங்கே ரவி என்பவர் மிக சரியாக கருத்து கூறியுள்ளார்...... இன்ஸ்டன்ட் லோன் கிரிடிட் கார்டு என 70% மக்கள் எங்கே கடன் கிடைக்கும் என்று தேடி தகுதிக்கு மீறி செலவு செய்கிறார்கள்...... முகால்வாசி பேர் சேமிப்பு என்பதையே கேவலமாக பார்க்கிறார்கள். ......வரும் வருமானத்தில் 10% பணத்தை சேமிப்பில் போடவேண்டும் இது மனிதனின் முதுகெலும்பை போன்றது........ சேமிப்புயில்லாமல் வாழ்வது தவறானது. வருமானம் குறைவு என்ற எண்ணத்தை விட்டு வரும் வருமானத்தில் 10% சேமியுங்கள்.... மழை நீர் சொட்டுக்கலாகதான் நிலத்தில் விழுகிறது.... சேர்ந்த பின் வெள்ளமாக உருவாகிறது


Raa
ஜூலை 29, 2024 16:49

இது அவரவர் வாங்கிய கடன். இதுயில்லாமல் நம்மை கேக்காமல், அரசு நம்மீது வாங்கிய கடன்களும் நம் மேல்தான்.


Swaminathan L
ஜூலை 29, 2024 14:51

தேவைகளுக்கும், ஆசைகளுக்குமே பலரிடம் வித்தியாசம் தெரியவில்லை. வாழ்வில் நுகர்வு மட்டுமே பிரதானமாகி விட்டது. ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச் போன்றது வாழ்க்கை. அதை டி20 மேட்ச் மாதிரி ஆடுபவர்கள் பெரும் சிக்கலில் தான் ஆழ்வது நிச்சயமாக நடக்கும். வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை குறுகிய, நீண்ட கால சேமிப்பு, மருத்துவ இன்ஸுரன்ஸ் போன்ற அத்யாவசிய விஷயங்களுக்கு ஒதுக்கி வைத்து செலவழிக்கவில்லையெனில், செலவு விஷயங்களில் கன்சர்வேடிவ் அணுகுமுறை இல்லையெனில் இஎம்ஐ சுழல்களில், கடன்களில் நெடுங்காலம் சிக்கிச் சீரழிய வேண்டியது தான். நாளை பற்றிய அக்கறை, எதிர்காலம் பற்றிய கவனம் இல்லாமல் இன்றைக்கு எப்படியெல்லாமோ செலவழித்து தற்காலிக இன்பத்தை நாடுபவர்கள் பின்னர் நெடுங்காலம் வருந்தி துன்புற வேண்டியிருக்கும். எப்படி கட்டுப்பாடு, சுதந்திரத்திற்கு நிழல் பாதுகாப்போ அது போல் பண விஷயத்தில் கன்சர்வேடிவ் அணுகுமுறை தான் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும்.


Siva Subramaniam
ஜூலை 29, 2024 14:36

இதுவரை ஆண்ட எந்த கட்சியும் முதியோர்களுக்கு குறிப்பாக ஏதும் செய்யவில்லை.


SANKAR
ஜூலை 29, 2024 21:24

free bus tickets to senior citizens in TN.Raliway concession ?ask non biological God!.available in all countries in the world except india


Siva Subramaniam
ஜூலை 29, 2024 14:34

எந்த கட்சி ஆண்டாலும், முதியோர்களுக்கு எதுவும் சேய்ததில்லை. எப்படியும் சில ஆண்டுகளில் போய்விடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.


aaruthirumalai
ஜூலை 29, 2024 14:06

தரமான கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக குடுங்க அப்புறம் பாருங்க இந்தியாவ!


Ramesh Sargam
ஜூலை 29, 2024 12:24

ஒரு சில குடும்பங்களில் கடன் வாங்கிய பெரியவர்கள் இறந்தபிறகும், அவர்களுடைய வாரிசுகள் அந்த கடனை அடைக்க மிக மிக சிரமப்படுகிறார்கள். இன்று பல குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் கடனிலேயே கழிக்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 09:29

1991 இல் தாராளமயமாக்கல் துவங்கிய காலத்திலிருந்து கிரெடிட் கார்டு, EMIயில் வாழ்வது வழக்கமாகி விட்டது. சக ஊழியர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சமமாக வாழ்ந்து காட்ட அளவுக்கு மீறி பர்சனல் கடன் வாங்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை.


Barakat Ali
ஜூலை 29, 2024 11:25

நன்னா படிச்சுப்பாருங்கோ... அறுபதுக்கு மேல் வயதுள்ளவர்களும் கடன் சுமையில் .....


அப்புசாமி
ஜூலை 29, 2024 08:06

வாராக்கடன் வங்கியில் சேர்க்க மனு கொடுக்கலாமே.. ஓ அது கார்ப்பரேட்களுக்குத்தானா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ