உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் செலவு ‛தொகை இவ்ளோதானா...

லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் செலவு ‛தொகை இவ்ளோதானா...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியானது. லோக்சபா தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.90 லட்சம் வரை செலவிட தேர்தல் கமிஷன் அனுமதிக்கிறது.இத்தேர்தல் செலவு களை வேட்பாளர்கள் ஜூன் 30க்குள் தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. அதன்படி மதுரை தொகுதியில் வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். அவற்றை சரிபார்க்க தேர்தல் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதையடுத்து செலவு கணக்குகள் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.மதுரை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் அதிகபட்சமாக ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் செலவிட்டுள்ளார். பா.ஜ.,வின் ராமசீனிவாசன் ரூ.51 லட்சத்து 86 ஆயிரத்து 512ம், தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் ரூ.47 லட்சத்து 99 ஆயிரம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி ரூ.25 லட்சத்து 60 ஆயிரத்து 532ம் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்

அ.தி.மு.க., ஜெயபெருமாள்- ரூ.51 லட்சத்து 20 ஆயிரத்து 648, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ரூ.80 லட்சத்து 70 ஆயிரத்து 243, பா.ஜ., கூட்டணியில் பலா பழச்சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ரூ.61 லட்சத்து 10 ஆயிரத்து 975, நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா ரூ.34 லட்சத்து 50 ஆயிரம்.இத்தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக களமிறங்கிய அதே பெயர் கொண்ட ஓ.பன்னீர்செல்வங்கள் செலவிட்ட தொகை வருமாறு:கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டவர் ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 175, வாளி சின்னத்தில் போட்டி யிட்டவர் ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 750, திராட்சை சின்னத்தில் போட்டியிட்டவர் ரூ.ஒரு லட்சத்து 17 ஆயிரம், கண்ணாடி டம்ளர் சின்னத்தில் போட்டியிட்டவர் ரூ. 10 ஆயிரம், பட்டாணி சின்னத்தில் போட்டியிட்டவர் ரூ.26 ஆயிரத்து 200 செலவிட்டுள்ளனர்.

விருதுநகர்

காங்.,வேட்பாளர் மாணிக்தாகூர் ரூ.66 லட்சத்து 91 ஆயிரத்து 130, தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் ரூ.64 லட்சத்து 60 ஆயிரத்து 800. மற்றவர்கள் தாக்கல் செய்த கணக்கு வெளியாகவில்லை.

சிவகங்கை

காங்.,வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ரூ.72 லட்சத்து 20 ஆயிரத்து 987, அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ் ரூ.68 லட்சத்து 92 ஆயிரத்து 232, பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.55 லட்சத்து 38 ஆயிரத்து 812, நாம் தமிழர் கட்சியின் எழிலரசி ரூ.34 லட்சத்து 76 ஆயிரத்து 595.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 14:04

நிறைய பேர் சிக்கனத்துக்காக ஒரு சைபரை குறைத்துக் காட்டியுள்ளனர்.


sriraju
ஜூலை 06, 2024 11:45

கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு, லட்சத்தில் செலவு செய்ததாக பொய் கணக்கு காட்டுகின்றனர்.


sriraju
ஜூலை 06, 2024 11:43

செலவு செய்தது ஒன்று. கணக்கு காட்டியது ஒன்று. உண்மையில் எவ்வளவு செலவு செய்தனர் என்பது வெளியே வருவது கிடையாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை